For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணைத் திறப்புக்காக வந்த போது விபத்தில் சிக்கிய முதியவரைக் காப்பாற்றிய ஓ.பன்னீர் செல்வம்

Google Oneindia Tamil News

Minister O.Paneer selvam saves an old man…
சேலம்: மேட்டூர் அணையில் நீர் திறப்புக்காக வந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வழியில் சாலை விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவரை மீட்டு ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரில் சேலம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது கார் கந்தம்பட்டி பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து பெங்களூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வம், முத்துக்குமார் ஆகியோர், சாலையைக் கடந்த பாலுச்சாமி என்ற 65 வயது முதியவர் மீது மோதி விட்டனர்.

இதனால் முதியவர் ரோட்டின் நடுவில் விழுந்து கிடந்தார். அப்போது காரில் வந்த அமைச்சர் இதைப் பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். விபத்தில் சிக்கி ரோட்டில் விழுந்து கிடந்த முதியவரை தூக்கி விட்டு அடிப்பட்டு விட்டதா? என விசாரித்தார்.

அதற்குள் அமைச்சரின் உதவியாளர்கள் அங்கு வந்து விட்டனர். பின்னர் முதியவரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேறு ஒரு காரில் ஏற்ற வைத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதியவரை இறக்கி விட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகைக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். முதியவர் பாலுச்சாமிக்கு தனியார் மருத்துவமனையில்யில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

English summary
Minister O.Paneer selvam rescued and saved a old man who met an accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X