For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு ஆதரவு- மோடியுடன் மு.க. அழகிரி நாளை சந்திப்பு?

By Mathi
|

மதுரை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரிக்க மு.க. அழகிரி முடிவு செய்துள்ளதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நாளை அவர் நேரில் சந்திக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகை தரும் மோடியுடன் பிரபலங்கள் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவது தொடர் கதையாகிவிட்டது. சில நாட்களுக்கு மோடி வந்த போது நடிகர் ரஜினிகாந்தை வீட்டுக்கே சென்று சந்தித்தார்.

MK Azhagiri will meet Modi tomorrow?

இதைத் தொடர்ந்து இன்று இரவு நடிகர் விஜய், மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த நிலையில் நாளை ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் மோடியை திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி சந்திக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் அவரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். ஆனால் யாரையும் அவர் ஆதரிப்பதாக உறுதி அளிக்கவில்லை.

இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்க அழகிரி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே மோடியை நாளை சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sources said, expelled DMK leader MK Azhagiri may meet BJP's Prime Ministerial Candidate Narendra Modi on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X