For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்கீரன் கருத்து கணிப்பு: திமுக- 22, அதிமுக -14, பாஜக-1, பாமக-1, தேமுதிக, மதிமுகவுக்கு 'முட்டை'

|

சென்னை: 40 தொகுதிகளுக்குமான நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 இடங்களை திமுக வெல்லும் என்றும், அதிமுகவுக்கு 14 இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக, பாமகவுக்கு தலா ஒரு இடம் கிடைக்கிறது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் வெல்லுமாம். தென் சென்னையில் இழுபறி நிலவுகிறது. தேமுதிக, மதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதாம்.

முதல் கட்டமாக கடந்த 18-4-2014 வெள்ளியன்று வெளியான நக்கீரன் இதழில் 15 தொகுதிகளுக்கான சர்வே முடிவுகள் இடம்பெற்றிருந்தன. மீதமுள்ள 25 தொகுதிகளுக்கான முடிவுகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

தூத்துக்குடியில் அதிமுக

தூத்துக்குடியில் அதிமுக

தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி. அவருக்கு தொகுதியில் 175 பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக வேட்பாளருக்கு 173 வாக்குகள் கிடைத்தன. மதிமுகவின் ஜோயல் 129 வாக்குகளுன்3வது நிலையில் இருக்கிறார். காங்கிரஸுக்கு 4வது இடமும், ஆம் ஆத்மிக்கு 6வது இடமும் கிடைக்கின்றன.

சிதம்பரத்தில் திருமா. வெல்கிறார்

சிதம்பரத்தில் திருமா. வெல்கிறார்

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெல்கிறார். 2வது இடத்தை பாமக பிடிக்கிறது. 3வது இடத்தில்தான் அதிமுக வருகிறது.

திருவள்ளூரில் அதிமுக வெல்கிறது

திருவள்ளூரில் அதிமுக வெல்கிறது

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் வெல்கிறார். இங்கு அவருக்கு 2வது முறையாக வெற்றி கிடைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் 2வது இடத்தையும், தேமுதிக 3வது இடத்தையும் பெறுகின்றன.

தர்மபுரியில் தப்பிப் பிழைக்கிறார் டாக்டர் அன்புமணி

தர்மபுரியில் தப்பிப் பிழைக்கிறார் டாக்டர் அன்புமணி

தர்மபுரியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், வெற்றி பெறுகிறார். அதே சமயம், திமுக அதிமுக இடையே இங்கு 2வது இடத்தைப் பிடிக்க கடும் மோதல் நிலவுகிறது. காங்கிரஸுக்கு 4வது இடமே.

ஆரணியில் அதிமுக

ஆரணியில் அதிமுக

ஆரணி தொகுதியில் அதிமுகவின் ஏழுமலைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாமக தலைவர் ஏ.கே.மூர்த்தி இங்கு 3வது இடத்தைப் பிடித்து தோல்வி அடைகிறாராம். 2வது இடத்தை தி்முக பிடிக்கிறது. காங்கிரஸுக்கு வழக்கம் போல 4வது இடமே.

காஞ்சியில் வெல்கிறது திமுக

காஞ்சியில் வெல்கிறது திமுக

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக பின்னடைவைச் சந்திக்கிறது. திமுக இங்கு வெல்கிறது. மதிமுகவின் மல்லை சத்யா தீவிரப் பிரசாரத்தின் எதிரொலியாக 3வது இடம் வரை முன்னேற முடிகிறது. 4வது இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

புதுச்சேரியில் நாராயணசாமி

புதுச்சேரியில் நாராயணசாமி

புதுச்சேரியில் கடும் போட்டிக்கு மத்தியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வெல்கிறார். அவருக்கும் என்.ஆர். காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இருப்பினும் நாராயணசாமிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 3வது இடத்தை திமுகவும், 4வது இடத்தை அதிமுகவும் பிடிக்கின்றன. 5வது இடத்துக்குத் தள்ளப்படுகிறது பாமக.

மத்திய சென்னையில் திமுக

மத்திய சென்னையில் திமுக

மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாம். இங்கு அதிமுக 2வது இடத்தையேப் பிடிக்குமாம். தேமுதிகவுக்கு 3வது இடமே.காங்கிரஸ் கட்சி 4வது இடத்தையே பிடிக்குமாம்.

பெரம்பலூரில் பாரிவேந்தர் தோல்வி- வெல்கிறது திமுக

பெரம்பலூரில் பாரிவேந்தர் தோல்வி- வெல்கிறது திமுக

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் 2வது இடத்தையேப் பிடிப்பாராம். முதலிடத்தைப் பிடிக்கிறது திமுக. அதிமுகவுக்கு இங்கு 3வது இடம்தான்.

நெல்லையில் வெல்கிறது திமுக

நெல்லையில் வெல்கிறது திமுக

நெல்லையில் திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரம் வெல்லும் வாய்ப்பு உள்ளதாம். அதிமுகவுக்கு இரண்டாவது இடமாம். தேமுதிக படு தோல்வி அடையுமாம். காங்கிரஸ் அதை விட மோசமான இடத்தைப் பிடித்து தோல்வி அடையுமாம்.

மதுரையை தக்க வைக்கிறது திமுக

மதுரையை தக்க வைக்கிறது திமுக

மதுரை தொகுதியில் திமுகவுக்கு வாய்ப்புகள் உள்ளன. 2வது இடத்தை அதிமுகவும், 3வது இடத்தை தேமுதிகவும் பிடிக்குமாம். இருப்பினும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கிடையே கிட்டத்தட்ட சம அளவிலா வாய்ப்புகளே இருப்பதால் கடைசி நேரத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஈரோட்டில் அதிமுக அமோக வெற்றி

ஈரோட்டில் அதிமுக அமோக வெற்றி

ஈரோட்டில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறதாம். இங்கு திமுகவுக்கு 2வது இடம் கிடைக்கிறது. மதிமுகவுக்கு 3வது இடம்தானாம். மதிமுகவுக்கு இங்கு மோசமான தோல்வி கிடைக்கும் என்று வேறு நக்கீரன் சொல்கிறது.

மயிலாடுதுறையில் அதிமுக வெற்றி

மயிலாடுதுறையில் அதிமுக வெற்றி

மயிலாடுதுறையில் அதிமுக வெல்கிறது. இங்கு மனிதநேய மக்கள் கட்சிக்கு 2வது இடமே கிடைக்கிறது. பாமகவுக்கு 3வது இடம் கிடைக்கலாம்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக

கள்ளக்குறிச்சியில் அதிமுக

கள்ளக்குறிச்சியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன. திமுக 2வது இடம். தேமுதிகவுக்கு 3வது இடமே. இந்தத் தொகுதியை ரொம்பக் கடுமையாக போராடி பாமகவிடமிருந்து தட்டி்ப பறித்தது தேமுதிக என்பது நினைவிருக்கலாம்.

திண்டுக்கல்லில் உதயசூரியன்

திண்டுக்கல்லில் உதயசூரியன்

திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் காந்திராஜனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். அதிமுக வேட்பாளர் உதயக்குமாருக்கு 2வது இடம்தானாம். தேமுதிகவுக்கு 3வது இடமும், காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தனுக்கு 4வது இடமும் கிடைக்குமாம்.

கோவையில் பாஜகவுக்கு 3வது இடமே

கோவையில் பாஜகவுக்கு 3வது இடமே

கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3வது இடத்தையப் பிடிக்க முடியுமாம். இங்கு அதிமுக வெல்கிறது. 2வது இடத்தைப் பிடிக்கிறது திமுக. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான பிரபு 5வது இடத்தையே பிடிப்பாராம்.

தஞ்சையில் தப்பிக்கிறார் டி.ஆர்.பாலு

தஞ்சையில் தப்பிக்கிறார் டி.ஆர்.பாலு

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தஞ்சாவூர் தொகுதியில் வெல்கிறாராம். இங்கு அவருக்கு ஓரளவு நல்ல ஆதரவு காணப்படுகிறது. 2வது இடத்தை அதிமுகவும், 3வது இடத்தை பாஜகவும் பெறுகின்றன. 4வது இடம்தான் அதிமுகவுக்கு.

அரக்கோணம்

அரக்கோணம்

அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வெல்கிறார். இரண்டாவது இடமே அதிமுகவுக்கு. 3வது இடத்தில் பாமக வருகிறது. பாமக சார்பில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு போட்டியிடுகிறார்.

நாமக்கல்லில் அதிமுகவுக்கு அபார ஆதரவு

நாமக்கல்லில் அதிமுகவுக்கு அபார ஆதரவு

நாமக்கல் தொகுதியில் அதிமுகவுக்கு அபார ஆதரவு காணப்படுகிறது. அக்கட்சியின் சுந்தரம் இங்கு வெல்கிறார். திமுகவின் காந்திச் செல்வன் 2வது இடத்தையும், தேமுதிக 3வது இடத்தையும் பெறுகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் திமுகவுக்கு வாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் திமுகவுக்கு வாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு 2வது இடமே கிடைக்குமாம். மதிமுக வேட்பாளர் மாசிலாமணி 3வது இடத்தையே பெறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு 4வது இடம் கிடைக்கிறது.

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி

தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். 2வது இடத்தை அதிமுக பெறுகிறது. 3வது இடத்திற்குத் தள்ளப்படுகிறார் மதிமுகவி்ன் சதன் திருமலைக்குமார்.

நீலகிரியில் ராசா

நீலகிரியில் ராசா

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராசா வெல்கிறார். கடும் போட்டியைக் கொடுத்துள்ள அதிமுகவுக்கு 2வது இடமே கிடைக்கிறது. 3வது இடத்தைப் பிடிக்கிறது காங்கிரஸ்.

தேனியில் தோற்கிறார் பொன். முத்துராமலிங்கம்

தேனியில் தோற்கிறார் பொன். முத்துராமலிங்கம்

தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பார்த்திபன் கை ஓங்கியுள்ளதாம். திமுக வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம் 2வது இடத்தில் உள்ளார். மதிமுக வேட்பாளர் அழகுசுந்தரம், 3வது இடத்திற்குத் தள்ளப்படுகிறார்.

சிவகங்கையில் கார்த்திக்கு 3வது இடம்.. அதிமுக வெல்கிறது

சிவகங்கையில் கார்த்திக்கு 3வது இடம்.. அதிமுக வெல்கிறது

சிவகங்கை தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனே வெல்வாராம். இருப்பினும் திமுக வேட்பாளருக்கும் இவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயிரிழையில் இங்கு அதிமுக வெல்லக் கூடுமாம். கார்த்தி சிதம்பரம் 3வது இடத்திற்கும், பாஜகவி்ன் ராஜா 4வது இடத்திற்கும் தள்ளப்படுகிறார்கள்.

திருப்பூரில் அதிமுக அபாரமாக வெல்லும்

திருப்பூரில் அதிமுக அபாரமாக வெல்லும்

திருப்பூர் தொகுதியில் அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு காணப்படுகிறது இங்கு அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வெல்வாராம். திமுகவுக்கு இங்கு 3வது இடமே கிடைக்குமாம். தேமுதிகவுக்கு இங்கு 2வது இடம் கிடைக்கிறது. காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 5வது இடத்திற்குத் தள்ளப்படுகிறார்.

பாஜகவுக்கு குமரி மட்டுமே

பாஜகவுக்கு குமரி மட்டுமே

கன்னியாகுமரியில் மட்டுமே பாஜக வெல்கிறது. நீலகிரியில் அந்தக் கட்சியின் வேட்பாளரின் மனு தள்ளுபடியாகிவிட்ட நிலையில், போட்டியிடும் 7 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே அக் கட்சி வெல்லும் என்கிறது நக்கீரன் கருத்துக் கணிப்பு

அன்புமணி மட்டுமே பாமகவுக்கு- ஒரு இடமே

அன்புமணி மட்டுமே பாமகவுக்கு- ஒரு இடமே

அதே போல 8 இடங்களில் போட்டியிடும் பாமகவுக்கு அன்புமணி போட்டியிடும் தர்மபுரியில் மட்டுமே வெற்றி கிடைக்குமாம்.

தேமுதிகவுக்கு முட்டையே..

தேமுதிகவுக்கு முட்டையே..

அதேசமயம், பாஜக கூட்டணியில் மிக அதிகமாக 14 இடங்களில் போட்டியிடும் தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது கருத்துக் கணிப்பு. இதில் சேலத்தில் போட்டியிடும் விஜய்காந்தின் மச்சான் சுதீஷும் அடக்கம்.

மதிமுகவுக்கும் ஒரு இடமும் கிடைக்காது..

மதிமுகவுக்கும் ஒரு இடமும் கிடைக்காது..

அதே போல 7 இடங்களில் போட்டியிடும் மதிமுகவும் பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், விருதுநகரில் வைகோவும் தோல்வியடைவார் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

பச்சமுத்து, கொங்குவுக்கும் நோ..

பச்சமுத்து, கொங்குவுக்கும் நோ..

மேலும் இந்தக் கூட்டணியில் பெரம்பலூரில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் பச்சமுத்துவும் தோற்பார் என்றும், பொள்ளாச்சியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரனுக்கும் தோல்வியே கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு.

தென் சென்னையில் இழுபறி:

தென் சென்னையில் இழுபறி:

தென் சென்னையில் கடும் இழுபறி நிலவுவதாகவும் இங்கு திமுக சார்பில் போட்டியிடும் டி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன், பாஜக வேட்பாளர் இல.கணேசன் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும், யார் வெற்றி பெறுவர் என்பதை யூகிக்க முடியவில்லை என்றும் நக்கீரன் கூறுகிறது.

39ல் திமுகவுக்கு 22 - அதிமுகவுக்கு 14

39ல் திமுகவுக்கு 22 - அதிமுகவுக்கு 14

ஆக, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவுக்கு 22 தொகுதிகளும் (இதில் புதிய தமிழகம்-தென்காசி, விடுதலைச் சிறுத்தைகள்- சிதம்பரம் ஆகியவையும் அடக்கம்), அதிமுகவுக்கு 14 இடங்களிலும், பாமக, பாஜகவுக்கு தலா ஒரு இடத்திலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக நக்கீரன் சொல்கிறது.

திமுக கூட்டணிக்கு கிடைக்கும் 22 தொகுதிகள்..

திமுக கூட்டணிக்கு கிடைக்கும் 22 தொகுதிகள்..

காஞ்சிபுரம், மத்திய சென்னை, பெரம்பலூர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, விருதுநகர், விழுப்புரம், ராமநாதபுரம், வடசென்னை, நாகப்பட்டிணம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி, சிதம்பரம் (விடுதலை சிறுத்தை), தென்காசி (புதிய தமிழகம்)

அதிமுகவுக்கு கிடைக்கும் 14 தொகுதிகள்...

அதிமுகவுக்கு கிடைக்கும் 14 தொகுதிகள்...

திருவள்ளூர், ஆரணி, ஈரோடு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கோவை, நாமக்கல், தேனி, சிவகங்கை, திருப்பூர், தூத்துக்குடி, சேலம், பொள்ளாச்சி, கரூர்

காங்கிரசுக்கு புதுச்சேரியில் மட்டும் ஆறுதல் வெற்றி..

காங்கிரசுக்கு புதுச்சேரியில் மட்டும் ஆறுதல் வெற்றி..

தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் வெற்றி கிடைக்கும் என்கிறது நக்கீரன். இங்கு நாராயாணசாமி வெல்வாராம்.

சில நாட்களுக்கு முன் 15 தொகுதிகளுக்கு நக்கீரன் தந்த கருத்துக் கணிப்பு

English summary
Nakkeran has released the poll survey for all 40 seats in TN and Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X