For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை பஸ்களில் டிக்கெட் எடுக்கத் தவறிய 23,000 பயணிகள்... ரூ. 41 லட்சம் அபராதம் வசூல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக சுமார் 23 ஆயிரம் பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் முறையாக டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிப்பதற்காக தனியாக பறக்கும் படை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பறக்கும் படையில் உல்ல 200க்கும் அதிகமான டிக்கெட் பரிசோதகர்கள் மாதந்தோறும் குறைந்தது 8 நாட்கள் ஒவ்வொரு பகுதியிலும் சோதனை நடத்துகின்றனர்.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து ஜூன் 14-ந்தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 23 ஆயிரத்து 322 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் ரூ.41 லட்சத்து 16 ஆயிரத்து 566 வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரமாவது:-

4400 பேர்...

4400 பேர்...

ஜனவரி மாதம் 8 நாட்கள் நடந்த சோதனையில் 4400 பேர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 454 வசூலானது.

3150 பேர்....

3150 பேர்....

பிப்ரவரி மாதம் 7 நாள் சோதனையில் 3150 பேர் பிடிபட்டனர். அபராத வசூல் ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 935.

3840 பேர்...

3840 பேர்...

மார்ச் மாதம் 8 நாள் சோதனையில் 3840 பேர் பிடிபட்டனர். அபராத வசூல் ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 889.

3984 பேர்...

3984 பேர்...

ஏப்ரல் மாதம் 8 நாள் சோதனையில் 3984 பேர் பிடிபட்டதில் ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 310 வசூலானது.

3880 பேர்...

3880 பேர்...

மே மாதம் 8 நாள் சோதனையில் 3880 பேர் பிடிபட்டனர். அபராத தொகை ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 407 வசூலானது.

4068 பேர்...

4068 பேர்...

ஜூன் மாதம் 9 நாள் நடந்த சோதனையில் 4068 பேர் பிடிப்பட்டனர். 7 லட்சத்து 89 ஆயிரத்து 571 வசூலானது.

English summary
In Chennai the ticket checkers have collected nearly Rs. 41 lakhs from the persons whom traveled without taking tickets in MTC buses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X