For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனுஷின் வேலை இல்லா பட்டதாரி படத்திற்கு நெல்லையில் எதிர்ப்பு – இந்து முன்னணியினர் கைது!

Google Oneindia Tamil News

நெல்லை: நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனுஷ் நடித்து வெளிவந்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் இந்து பள்ளியில் படித்த மாணவன் முட்டாளாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் வேலையில்லா பட்டதாரி படம் திரையிடப்பட்டது.

Nellai Hindu munnani party members oppose VIP film…

இதுபற்றி அறிந்த இந்து முன்னணியினர் அந்த தியேட்டரை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாவட்ட துணை தலைவர் வெட்டும் பெருமாள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

அவர்கள் திரையிட்டப்பட்ட தியேட்டர் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த படம் திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களையும் முற்றுகையிடுவோம் என்று அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

English summary
Nellai Hindhu munnani people blockade against Dhanush’s VIP film. Police arrested 32 members in the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X