For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் நெல்லை ரயில் நிலையம் மிகவும் முக்கியமானது. பயணிகளின் வருவாய், சரக்கு, பார்சல் வருவாய் மூலம் கணிசமான அளவு தெற்கு ரயில்வேக்கு கிடைத்து வருகிறது.

மதுரை கோட்டத்திற்கு பார்சல் வருமானத்தை பொறுத்தவரை மதுரையும், விருதுநகரும் இது நாள் வரை தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையமாக இருந்து வந்தது. தற்போது அது நெல்லையையும் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையமாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால் இந்த ரயில் நிலையத்தில் பார்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அழுகும் பொருட்கள் இந்த ரயில் நிலையங்களுக்கு வந்தால் இதற்கு முன்பு 18 மணி நேரம் வரை அங்கு வைத்திருக்க பணம் செலுத்த வேண்டியதில்லை.

அதன் பி்ன்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50 கிலோ பார்சல் என்றால் 50 பைசா வீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த கால அவகாசம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட ரயில் நிலையமாக நெல்லை அறிவிக்கப்பட்டுள்ளதால் 10 மணி நேரத்திற்குள் பார்சல்களை பொதுமக்கள் எடுத்தாக வேண்டும். அதற்கு மேல் 10 மணி நேரத்திற்கு மேல் 1 மணி நேரத்திற்கு 1 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இது போல் கார், பைக் போன்றவற்றை 6 மணி நேரத்திற்குள் பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்கு மேல் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 10 வீதம் சம்பந்தப்பட்டவரிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nellai railway will soon made Quality enhancement, southern railway says. The merchants were happy for this information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X