For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவுக்கு கடத்திய ரூ 43 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: 2 பேர் கைது

Google Oneindia Tamil News

செங்கோட்டை: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரூ.43 லட்சம் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

நெல்லைமாவட்டம் தென்காசியிலிருந்து செங்கோட்டை புளியரை வழியாக கேரளமாநிலம் ஈராத்துபேட்டை என்றப் பகுதிக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் கேரளா அரசுப் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

அந்த பேருந்தை கேரளா மாநிலம்ஆரியங்காவு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் புனலூர் மதுவிலக்கு போலீஸ் அதிகாரிகள் அனில்குமார்,ராஜீவ் உள்ளிட்ட குழுவினர் நிறுத்திசோதனை மேற்கொண்டனர்.

அப்போது பேருந்தில் பயணிகள் பொருட்களை வைக்கும் பகுதியில் கனமான இரண்டு ட்ராவல் பேக் இருப்பதை சோதனை செய்தனர்.அப்போது அதில் கட்டுக்கட்டாய் ரூபாய்.1000 ஆயிரம்,500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ட்ராவல் பேக்கில் 10 லட்சம் ரூபாய் இருப்பதாக சொல்லியுள்ளனர். உடனே ரூபாய் கட்டுகளை போலீசார் எண்ணவே அதில் மொத்தம் 43 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. விசாரணையில் அவர்கள் கடையநல்லுரை சார்ந்த சாகுல்ஹமீத்(45) முகம்துசலீம்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Nellai: Rs 43 lakh Hawala money seized, 2 held

அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாகவும், புனலூர் சென்றதும் அங்கு ஒருநபர் வாங்கிக்கொள்வார் எனவும் தெரிவித்தனர். இதற்கு கூலியாக தலா 5ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பணம் கொடுத்த நபர் யார், பணம் எங்குசெல்கிறது என்ற விபரம் குறித்து தொடர்விசாரணை நடக்கிறது.

தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் 43 லட்சம் ரூபாய் சிக்கிய சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

English summary
A special crime squad of police has arrested 2 persons on charges of carrying hawala money and seized nearly Rs. 43 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X