For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக விஜயகாந்த்த்தை சந்தித்தார் திமுக நெப்போலியன்... நலம் விசாரித்தார்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகரும் திமுக முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதன் பிறகு ஓய்வில் இருந்த அவர், கடந்த 25ஆம் தேதி தனது பிறந்த நாளையொட்டி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அப்போது தமிழக பாஜக தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்து வாழ்த்து கூறியதோடு, நலம் விசாரித்தனர்.

கோயம்பேட்டில்

கோயம்பேட்டில்

இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரை நடிகர் நெப்போலியன் சந்தித்து பேசினார்.

6 மாதமாக அமெரிக்கா வாசம்

6 மாதமாக அமெரிக்கா வாசம்

நெப்போலியன் கடந்த 6 மாதமாக குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மூத்த மகனுக்காகவே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளார் நெப்போலியன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் சென்னை திரும்பினார்.

நலம் விசாரித்தார்

நலம் விசாரித்தார்

விஜயகாந்த் உடல் நிலை பற்றி கேள்விப்பட்ட அவர் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகம் சென்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நெப்போலியன் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

20 நிமிடப் பேச்சு

20 நிமிடப் பேச்சு

இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது. நெப்போலியன் ரசிகர் மன்ற தலைவர் கவுரிசங்கரும் உடன் சென்றிருந்தார்.

என்ன காரணமோ....

என்ன காரணமோ....

திமுக உடன் தேமுதிக நெருங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.

English summary
Actor and Former DMK Minister Neppoleon met DMDK president Vijayakanth at his Koyambedu office in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X