For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்...வழக்கம் போல மாணவிகளே அதிக தேர்ச்சி

By Shankar
Google Oneindia Tamil News

Plus two results today
சென்னை: ப்ளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது.

முடிவை அரசு இணையதளங்களிலும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும், படித்த பள்ளிகளிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள்.

அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் இணையதளம் வழியாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் இன்றே (வெள்ளிக்கிழமை) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மறு கூட்டல்

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 14-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்:

1.http://tnresults.nic.in/
2. http://dge.tn.gov.in/
3. http://www.dge1.tn.nic.in/
4. http://dge2.tn.nic.in/
5. http://www.dge3.tn.nic.in/

English summary
Plus two results are releasing today at 10 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X