For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் மோதும் பா.ம.க.

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுகவுடன் பா.ம.க. நேரடியாக 6 தொகுதிகளில் மோதுகின்றன.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் 6 தொகுதிகளில் அதிமுக, திமுகவுடன் நேரடியாக மோதுகிறது பா.ம.க.

அரக்கோணம்

அரக்கோணம்

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக திருத்தணி அரி, திமுக வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ களமிறக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் பா.ம.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் அ. வேலு களமிறங்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக்குமார், திமுக சார்பில் சின்ன பில்லப்பாவும் போட்டியிடுகின்றனர். இங்கு பா.ம.க. சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார்.

தருமபுரி

தருமபுரி

இங்கு திமுகவின் சிட்டிங் எம்.பி. தாமரைச்செல்வன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் மோகன் களமிறங்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

ஆரணி

ஆரணி

ஆரணி தொகுதியில் அதிமுக சார்பில் செஞ்சி ஏழுமலையும் திமுக சார்பில் சிவானந்தமும் போட்டியிட பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதியில் அதிமுகவின் வனரோஜாவும் திமுகவும் அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் பா.ம.க.வின் எதிரொலி மணியன் களமிறக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

இத்தொகுதியில் சிட்டிங் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயனை திமுக களமிறக்கியுள்ளது. அதிமுகவின் கோபால் போட்டியிடுகின்றனர். பாமகவும் இத்தொகுதியில் போட்டியிடுகிறது.

English summary
BJP ally, PMK to clash with ADMK, DMK in 6 constituencies for upcoming lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X