For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது.. 5000 பெண்கள் பங்கேற்ற மது ஒழிப்பு போராட்டத்தில் அன்புமணி பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், ஊழலற்ற , வெளிப்படையான ஆட்சி வழங்க வேண்டிய தமிழக அரசு மதுவிற்பனை செய்து வருகிறது. தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது' என பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து மதுஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது பாமக. வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் தங்களது முதல் கையெழுத்து மது விலக்கை அமுல் படுத்துவதாகத் தான் இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக பாமக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது.

5000 பெண்கள்...

5000 பெண்கள்...

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடமை...

கடமை...

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது அவர் பேசுகையில், "தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், ஊழலற்ற , வெளிப்படையான ஆட்சி வழங்க வேண்டியது அரசின் கடமை.

தமிழகம் சீரழிகிறது...

தமிழகம் சீரழிகிறது...

ஆனால்அரசு மதுவிற்பனை செய்து வருகிறது. தமிழகம் மதுவால் சீரழிந்து வருகிறது' என குற்றம் சாட்டினார்.

சிறப்பு விருந்தினர்...

சிறப்பு விருந்தினர்...

இந்தப் போராட்டத்தில் சுவாமி அக்னிவேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் கே.என். சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

English summary
The PMK staged a protest against liquor with large number of women today in Chennai .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X