For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா தகுதியானவரா?: துர்கா ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

|

சென்னை: ஒரு பெண் நாட்டை ஆள்வது சரியான விஷயம் தான் என்ற போதும், அந்தப் பதவிக்கு ஜெயலலிதா தகுதியான நபர் இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு துணையாக சென்று வருகிறார் அவரது மனைவி துர்கா ஸ்டாலின். கணவரின் பிரச்சாரங்களை பார்வையாளராக இருந்து கவனித்து வரும் துர்கா ஸ்டாலின், தனது அரசியல் குறித்தான நிலைப்பாடு குறித்து ‘தி இந்து' நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :-

அதிமுக அரசு மீது கோபத்தில் மக்கள்...

அதிமுக அரசு மீது கோபத்தில் மக்கள்...

கேள்வி : உங்கள் கணவருடன் பிரச்சாரப் பயணத்தில் கூடவே பின்தொடர் கிறீர்கள். மக்களின் நாடித் துடிப்பு எப்படி இருக்கிறது?
பதில் : செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு குடுக்குறாங்க. களைப்பின் வலி தெரியாமல் நாங்கள் ஓடிக் கொண்டே இருப்பதற்கு அதுதான் முக்கியக் காரணம். இந்தத் தேர் தலில் அதிமுக அரசு மீது மக்கள் ரொம்பவே கோபமாக இருப்பது தெரிகிறது.

ஜெ. பிரதமரானால்...

ஜெ. பிரதமரானால்...

கேள்வி : ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்கிறார்கள் அதிமுக-வினர். ஒரு பெண் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் வரவேற்பீர்களா?
பதில் : ஒரு பெண் நாட்டை ஆள்வது என்பது நல்ல விஷயம்; இன்றைய சூழலில் அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஜெயலலிதா அதுக்கு தகுதியானவங்கன்னு எனக்குத் தோணலியே.

தனியாக பிரச்சாரம் செய்யும் திட்டமில்லை...

தனியாக பிரச்சாரம் செய்யும் திட்டமில்லை...

கேள்வி : பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் கலக்கி எடுக்கிறார். அதுபோல நீங்கள் ஏன் மைக் பிடிக்கவில்லை?
பதில் : தமிழ்நாடு முழுவதும் எனது கணவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக நானும் செல்கிறேன். இந்தத் தேர்தலில் நான் பார்வை யாளராக இருந்து மக்களின் மனதை படித்துக் கொண்டிருக் கிறேன். அதனால், தனியாக பிரச்சாரம் செய்ய திட்டமில்லை.

வேட்பாளர் தேர்வு...

வேட்பாளர் தேர்வு...

கேள்வி : திமுக வேட்பாளர் தேர்வில் இந்த முறை உங்கள் கணவரின் கையே ஓங்கியதாக சொல்லப்படுகிறதே?
பதில் : கட்சி விவகாரங்களில் நான் தலையிடுவது இல்லை. அதனால், வேட்பாளர் தேர்வு பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.

ஆச்சர்யமான விசயம்...

ஆச்சர்யமான விசயம்...

கேள்வி : திமுக தலைவர் கருணாநிதி 90 வயதிலும் பிரச்சாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?
பதில் : தேர்தல் பிரச்சாரத்தில் எவ்வளவு சிரமங்கள் இருக்குன்னு களத்துல இருக்கிறவங்களுக்குத் தான் தெரியும். எங்களுக்கே இப்படினா, அவங்க எப்படி இந்த வயசுலயும் இப்படி உழைக்கிறாங் கனு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

ஜெ.வுக்கு எதிரான அலை....

ஜெ.வுக்கு எதிரான அலை....

கேள்வி : மோடி அலை வீசுகிறது, அம்மா அலை வீசுகிறது என்று பிரச்சாரங்கள் பிரமாதப்படுகிறதே?
பதில் : எங்க கண்ணுக்கு அப்படி எந்த அலையும் தெரியவில்லை. நான் பார்த்த வரைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் தெரிகிறது.

English summary
The DMK treasurer M.K.Stalin's wife Durga in an interview to a Tamil daily has shared her views on Tamilnadu politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X