For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்கள் ஃபுல்- சென்னை திரும்ப வழியின்றி திணறும் பொதுமக்கள்

Google Oneindia Tamil News

நெல்லை: பொங்கல் பண்டிகை முடிந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரயிலில் இடம் இல்லாமல் பயணிகள் திணறி வருகின்றனர்.

சென்னை, திருச்சி, மும்பை போன்ற பல இடங்களில் தென் மாவட்டத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவில்லை.

rail

இதனால் நெல்லையிலிருந்து சென்னை செல்ல ஆயிரக்கணக்கானோர் காத்திருப்போர் பட்டியில் உள்ளனர். நேற்று பொங்கல் பண்டிகை முடிந்ததால் அவர்கள் பணிபுரியும் இடத்துக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

வரும் 20ம் தேதி வரை சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ஹவுஸ்புல்லாக இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி போய் உள்ளனர்.

20ம் தேதி வரை 1280 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் 2451 பேர் பதிவு செய்து விட்டு இடம் கிடைப்பது சந்தேகம் என்பதால் கேன்சல் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ஏசி கேச்சில் பயணிக்க காத்திருப்போர் பட்டியலில் 286 பேர் உள்ளனர். 701 பேர் டிக்கெட்டுகலை ரத்து செய்துள்ளனர். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 1305 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 2559 பேர் டிக்கெட் எடுத்து விட்டு கேன்சல் செய்துள்ளனர்.

முத்து நகர் எக்ஸ்பிரசில் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க 1120 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 2229 பேர் டிக்கெட்டுகளை கேன்சல் செய்துள்ளனர்.

பொதிகை எக்ஸ்பிரசை பொறுத்தவரை 1429 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 2690 பேர் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயை சேர்ந்த சிலர் கூறுகையில், பொங்கல் முடிந்ததால் பலர் சென்னை செல்ல தொடங்கி விட்டனர். ஆனால் குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்படுவதால் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்கள் தேவைக்காக குறைந்தது இரண்டு சிறப்பு ரயில்களையாவது இயக்க வேண்டும். தெற்கு ரயில்வே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

English summary
With advance reservations in trains to Coimbatore and other southern cities having been booked in full for this forthcoming Pongal, commuters are eagerly waiting to book their tickets for the return journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X