For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளக்கம் தராத அமைச்சர்கள்... டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு

Google Oneindia Tamil News

PT stages walkout from assembly
சென்னை: தனது புகாருக்கு அமைச்சர்கள் விளக்கம் தரவில்லை என்று கூறி சட்டசபையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். அப்போது அவர், முதலீட்டாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இதுதொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சரின் விளக்கத்தையும் கோரினார்.

மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கு கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார். பின்னர் எழுந்த கிருஷ்ணசாமி, இந்த பதிலில் திருப்தி இல்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். அதேபோல மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

ஏற்கனவே திமுக தொடரைப் புறக்கணித்து விட்டது. தேமுதிகவும் புறக்கணித்து விட்டது. டாக்டர் கிருஷ்ணசாமியும் தொடர்ந்து வெளிநடப்புச் செய்து வருகிறார். மனித நேய மக்கள் கட்சியும் வெளிநடப்புச் செய்து வருகிறது. இதில் தேமுதிகவைத் தவிர மற்ற கட்சிகள் இரண்டுமே திமுக கூட்டணிக்கு சமீபத்தில் வந்தவை என்பது நினைவிருக்கலாம்.

English summary
PT leader Dr Krishnaswamy staged walkout from assembly today after concern minsters gave their explanations to his quries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X