For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மோடி சந்திப்பு

மோடி சந்திப்பு

லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார்.

அமித்ஷா பேச்சுவார்த்தை

அமித்ஷா பேச்சுவார்த்தை

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அரசியலில் குதிக்க வலியுறுத்தினார். பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு வீட்டு தரப்பிலும் இருந்தும் சரி.. அரசியலில் குதித்தால் என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

கருணாநிதிக்காக..

கருணாநிதிக்காக..

அதாவது திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

ஆக்டிவ்வாக இருக்கப்போவதில்லை

ஆக்டிவ்வாக இருக்கப்போவதில்லை

இதை சுட்டிக்காட்டும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இருக்கமாட்டார். அதனால் உங்களது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள் என்று சொல்கின்றனராம்.

பாஜகவில் சேர வேண்டாம்

பாஜகவில் சேர வேண்டாம்

அதே நேரத்தில் பாஜக அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்துவிட வேண்டாம் என்பதும் ரஜினியிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறதாம்.

தனிக்கட்சிதான் சரி

தனிக்கட்சிதான் சரி

தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அட்வைஸாம்.

ஆமோதிக்கும் ரஜினி

ஆமோதிக்கும் ரஜினி

ரஜினிகாந்தும் இதுதான் சரியான ரூட்டாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம்.

English summary
It was only a few months ago that Prime Minister Narendra Modi's photo-op with Tamil superstar Rajinikanth ahead of the Lok Sabha elections went viral on social media. Now, it appears that the Bharatiya Janata Party is trying to woo the actor full-time into state politics. Rajinikanth has kept everyone guessing for a long time on whether he will join politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X