For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Rope car service temporarily stopped in Pazhani
பழனி: பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப் கார் சேவை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்படுகிறது. இன்று முதல் ரோப் கார் பராமரிப்புப்பணிகள் தொடங்குகின்றன.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று, பழனி. பக்தர்கள் மூலமாக அதிக உண்டியல் வருவாய் பெறும் தமிழக கோயில்களில் முதன்மையானதும் பழனி. மலைமீது ஆண்டியின் கோலத்துடன் குடியிருக்கும் முருகனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பால தண்டாயுதபாணி கோயிலுக்கு வருகிறார்கள்.

முதியோர்கள், உடல் சோர்வுற்றோர்கள் நலனுக்காக ரோப் கார் எனப்படும் கம்பியில் செயல்படும் பெட்டிகள் பழனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாத காலம் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ரோப் கார் பராமரிப்பு பணிகள் தொடங்குவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வின்ஞ் மற்றும் படிக்கட்டுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

English summary
Rope car service temporarily stopped in Bala Thandauthapani temple at Pazhani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X