For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரக்கடித்தாலும் அதிமுகவுக்கு சரியா ஓட்டு போடணும்... சீமான் சர்ச்சை பேச்சு

By Mayura Akilan
|

தஞ்சாவூர்: டாஸ்மாக் போய் சரக்கடித்துவிட்டு தள்ளாடி தள்ளாடி போதையில் சென்றாலும், சரியாக இரட்டை இலைக்கே ஓட்டு போடுங்க என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை திலகர் திடலில் அதிமுக வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பேசியதாவது:

Seeman election campaign in Tanjavur

பெரியார், அம்பேத்கர் ஆகியோர் பிறந்த மண்ணில் பாஜக எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. 1967ம் ஆண்டி லிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட் டை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. ஆனால் நாட்டுக்காக எது வும் செய்யவில்லை.

எரிபொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையை மாற்றினால் தான் நம் தேசத்தின் முழு விடுதலை யை பெற முடியும்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை யில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. பாஜவையும், காங்கிரஸ் கட்சியையும் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.

அதற்கு அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். போதையில் தள்ளாடி தள்ளாடி போனாலும் அங்கே போய் சரியாக இரட்டை இலைக்கே போடணும்.

ஓட்டு போட்டுவிட்டு வந்து குடித்தாலும் தப்பில்லை... என்று கூறினார் சீமான். அவரது பேச்சு நாம் தமிழர் கட்சியினருக்கு வேண்டுமானால் நகைச்சுவையாக இருந்திருக்கலாம் ஆனால் பொதுமக்கள் முகம் சுழிக்குமாறு அமைந்திருந்தது. சீமான் என்ன சொல்ல வருகிறார்? அதிமுகவினர் கொடுக்கும் குவாட்டரை வாங்கி குடித்துவிட்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்கிறாரா? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

English summary
Naam Tamizhar Katchi leader Seeman hate speech in his election campaign in Tanjavur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X