For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உட்கார்ந்தே வேலை பார்த்தால் ஹார்ட் அட்டாக், கேன்சர் வரும்.. வாக்கிங் போனீங்கனா தப்பிக்கலாம்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது தான் தற்போது உழைக்கும் வர்க்கத்தின் முக்கிய நோயாக உள்ளது. உட்காருவது நோயா என்று கேட்டால் ஆமாம். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை படித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். கம்ப்யூட்டருடன் ஒன்றிப் போய்விடுகிறார்கள். கேட்டால் எழுந்து நடமாட நேரம் இல்லை என்கிறார்கள்.

அப்படி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்காகவே இந்த செய்தி.

உட்காருதல்

உட்காருதல்

எழுந்திரிக்காமல் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்தால் வயதான காலத்தில் வரும் நோய் எல்லாம் இளம் வயதிலேயே வருமாம். இதை நாங்கள் கூறவில்லை, ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

நோய்கள்

நோய்கள்

சீட்டில் பசை போட்டால் போன்று உட்காருவதால் புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன், வாதம், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுமாம்.

மரணம்

மரணம்

பெரிதாக ஒன்றும் இல்லை அரை மணிநேரம் உட்கார்ந்த இடத்தில் அப்படியே இருந்தால் கூட நோய் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உட்கார்ந்திருப்பது தான் இளம் வயதில் மரணம் அடைய வழிவகுக்கிறது.

வாக்கிங் சவால்

வாக்கிங் சவால்

ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று வரும் மக்கள் ஒரு நாளில் மணிக்கொரு முறை இருந்த இடத்தில் இருந்து எழுந்து நடக்கும் வாக்கிங் சவாலை ஏற்கலாமே. இந்த சவாலை ஏற்பதால் உங்களின் உடல் நலத்திற்கு தான் நல்லது. மேலும் தினமும் மணிக்கு ஒரு முறையாவது இருக்கையில் இருந்து எழுந்து நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சவாலா?

சவாலா?

வாக்கிங் சவாலா யார் அறிமுகப்படுத்தியது என்று கேட்கிறீர்களா? அட, மக்கள் நலனில் அக்கறை கொண்டு நாங்கள் அறிமுகப்படுத்துவது தான்.

English summary
Reasearchers told that sitting for long hours lead to early death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X