For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாத சம்பளதாரர் வருமான வரி கணக்கு தாக்கல்: 33 சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மாதச் சம்பளதாரர்கள் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் பணி இன்று (ஜூலை 28) முதல் தொடங்கியுள்ளது. இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 33 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டுள்ளன.

ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் மொத்த வருவாய் உள்ளவர்கள் மற்றும் கம்பெனி அல்லாத வரி செலுத்து பவர்கள் ஆகியோர்களுக்கு ஜூலை 28, 30, 31 ஆகிய தேதி களில் வருமான வரி தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

29-ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.

33 சிறப்புக் கவுண்டர்கள்

33 சிறப்புக் கவுண்டர்கள்

வருமான வரி செலுத்துபவர்களுக்கு 33 சிறப்பு கவுன்ட்டர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்திற்கு மேல்

ரூ.5 லட்சத்திற்கு மேல்

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் ஆன்லைன் மூலமாகத்தான் வருமான வரி செலுத்த வேண்டும். முதல் முறையாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

150 ஊழியர்கள்

150 ஊழியர்கள்

வருமான வரி தாக்கல் செய்யும் பணியில் வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த சுமார் 150 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

5.65 லட்சம் பேர்

5.65 லட்சம் பேர்

கடந்த ஆண்டு 5.65 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 55 ஆயிரம் பேர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் கணக்கைத் தாக்கல் செய்தனர்.

காலக்கெடு கிடையாது

காலக்கெடு கிடையாது

எனவே, இந்த ஆண்டும் ஏராளமானோர் தங்களது கணக்கைத் தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31தான் கடைசித்தேதி காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
33 Special Return Receipt Counters will be opened at Aayakar Bhawan to file returns from salaried tax payers between July 28 and July 31 during 9.45 am and 5.30 pm, according to a release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X