For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. எம்எல்ஏ பதவி பறிப்பு: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறை சென்றதை அடுத்து அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. எம்.எல்.ஏ என்ற தகுதியையும் இழந்துவிட்டார். இதனையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேரதல் நடத்தப்பட்டாக வேண்டும்.

ஸ்ரீரங்கம் தனது பூர்வீகம் என்று கூறிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். இதனையடுத்து இந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது.

எண்ணற்ற நலத்திட்டங்கள் ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கு கிடைத்தன. அடிக்கடி அந்த தொகுதிக்கு சென்ற ஜெயலலிதா, பல நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்.

யாத்ரி நிவாஸ்

யாத்ரி நிவாஸ்

ஸ்ரீ ரங்கம் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அடுத்து, பட்டாம்பூச்சி பார்க், யாத்ரிநிவாஸ், மகளிர் கல்லூரி, உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந் நிலையில் அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்குக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 5 இடைத்தேர்தல்கள்

அதிமுக ஆட்சியில் 5 இடைத்தேர்தல்கள்

2011ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றது தொடங்கி இதுவரை 5 இடைத்தேர்தல்களை தமிழகம் சந்தித்துள்ளது.

திருச்சி மேற்குத் தொகுதி

திருச்சி மேற்குத் தொகுதி

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானார் மரியம் பிச்சை. சில தினங்களிலேயே கார் விபத்தில் அவர் மரணம் அடைந்ததால், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அந்த ஆண்டே இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதிமுகவின் பரஞ்சோதி வெற்றி

அதிமுகவின் பரஞ்சோதி வெற்றி

அ.தி.மு.க. வேட்பாளராக மு.பரஞ்சோதி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிட்டார். மு.பரஞ்சோதி 68,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்

சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட கருப்பசாமி, 4வது முறையாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். முதலில் கால்நடைத் துறை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பணியாற்றினார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கருப்பசாமி காலமானார். இதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதிமுகவின் முத்துச்செல்வி வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தல்

புதுக்கோட்டை இடைத்தேர்தல்

கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த முத்துக்குமரன் கார் கவிழ்ந்த விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.

ஏற்காடு தொகுதி

ஏற்காடு தொகுதி

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதியின் தேமுதிக எல்.எல்.ஏவாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த 2013-ம் ஆண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.கவில் இணைந்தார்.இதனையடுத்து கடந்த மே மாதம் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் மொத்தம் 89,295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

English summary
The unseating of Jayalalithaa as Chief Minister has triggered apprehensions among a section of voters in Srirangam that the constituency may lose its prominence after hectic development activities over the past three years. Srirangam has lost its ‘VIP constituency’ status overnight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X