For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"Stalin for 2016"... எனக்கும் அதற்கும் தொடர்பில்லை - ஸ்டாலின் மறுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: என் பெயரில் மிகுந்த அக்கறை கொண்டவர்களைப் போல சிலர் வெளியிடுகிற செய்திகளுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதை திமுகவினர் யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் பேஸ்புக் பக்கத்தில் திடீரென இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், "இணைய தளச் செய்தி" என்ற பெயரால் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக, ஏதோ என் பெயரில் மிகுந்த அக்கறை கொண்டவர்களை போல, சிலர் வெளியிடுகின்ற செய்திகளுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கழகத் தலைவருக்கு எதிராக, கழகத் தோழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்நோக்கத்தோடு இந்தச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, பேஸ்புக்கில் சமீபத்தில் "Stalin for 2016" என்ற பக்கம் தொடங்கப்பட்டது. இதனால் திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. 2016 தேர்தலில் ஸ்டாலின் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களத்தில் இறங்கி விட்டாரோ என்ற பேச்சுக்களும் எழுந்தன.

Stalin says he has no link with "Stalin for 2016" FB page

திமுக தரப்பிலோ அல்லது ஸ்டாலின் தரப்பிலோ இதற்கு யாரும் மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த பேஸ்புக் பக்கத்திற்கு திமுகவினர் பலரும் வந்து லைக் கொடுக்கத் தொடங்கினர். கருத்துக்களும் குவியத் தொடங்கின. வரவேற்பும் பெருகியது.

இந்த நிலையில்தான் இந்த பக்கத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அனைவருக்கும் விளக்கும் வகையில் இந்த விளக்கத்தை ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அப்படியானால் "Stalin for 2016" என்ற பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்திருப்பது யார் என்பது புரியவில்லை.

English summary
DMK leader M K Stalin has clarified that he has no link with "Stalin for 2016" FB page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X