For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதில் குஜராத் முதலிடம்? சேலத்திலேயே பட்டியல் போட்டு மோடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

By Mathi
|

சேலம்: தமிழக மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சேலத்தில் நேற்று பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, சேலம் மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்றார். மோடி கூட்டத்துக்குப் பின்னர் சேலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து பேசியதாவது:

பாரதிய ஜனதா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி இன்றைக்கு சேலத்துக்கு வந்திருக்கிறார். அவர் பேசுகிறபோது அதிமுக ஆட்சியை பற்றி பேசியிருந்தால் பரவாயில்லை. ஆனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த கோட்டைமேடு கூட்டத்தின் மூலம் அவரை நான் கேட்க விரும்புவது, இன்றைக்கு குஜராத் மாநிலத்தின் நிலைமை என்ன ? என்னுடைய கேள்விக்கு அவராவது, இல்லை அந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது பதில் அளிக்க வேண்டும்.

கல்வியில் 28வது இடம்

கல்வியில் 28வது இடம்

குஜராத் நாட்டிலே முதல் மாநிலமாக உள்ளது என்று மோடி சொல்கிறார் ஆனால் தேசிய திட்ட கமிசன் தகவலில் எதிலும் முதல் மாநிலமாக இல்லை. இன்றைக்கு நாட்டிலேயே கல்வியில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் கேரளா. ஆனால் குஜராத் கல்வியில் பெற்றுள்ள இடம் 28வது இடம்.

விவசாயம், தொழில், தகவல்துறையில்..

விவசாயம், தொழில், தகவல்துறையில்..

அதேபோல விவசாயத்தில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் ஏழாமிடத்திலும் உள்ளது. தொழில்துறையிலும் தகவல் தொழிநுட்பத்திலும் கர்நாடகம் முதலிடம் பெற்றுள்ளது. ஆனால் மோடி ஆளுகிற குஜராத் மாநிலம் 6ம் இடத்தில் உள்ளது.

வருமானம், அன்னிய முதலீட்டில்

வருமானம், அன்னிய முதலீட்டில்

மாநில வருமானத்தில் ஹரியானா முதலிடம் குஜராத் ஆறாம் இடம். அன்னிய நேரடி முதலீடு பெற்றதில் மகாராஷ்டிரா முதலிடம் குஜராத் ஐந்தாவது இடம். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பீகார் முதலிடம், குஜராத் ஆறாமிடம்.

இதில்தான் முதலிடம்

இதில்தான் முதலிடம்

பிறகு எதில் தான் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றால், கர்ப்பிணியாக இருக்கும் தாய்மார்களின் வயிற்றில் உள்ள கருக்களை கொலை செய்வதில் குஜராத் முதலிடம்.. குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடுகளில் முதலிடம், சிறுபான்மையின மக்களை அடக்குவதில் முதலிடம் பெற்றுள்ளது.

விவசாயிகள் தற்கொலை..

விவசாயிகள் தற்கொலை..

5000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். அதில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதில் மோடி ஆளும் குஜராத் முதலிடம் என்பதை நான் இங்கு ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.

மின் இணைப்பே இல்லா குஜராத்

மின் இணைப்பே இல்லா குஜராத்

அதேபோல மின் உற்பத்தி பற்றி இங்கு வந்து பேசிவிட்டு போயிருக்கும் மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே கிடையாது. ஆனால் கருணாநிதி 1970ல் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழ்நாட்டில் கிராமந்தோறும் மின் இணைப்பு தந்த முன்னோடி மாநிலமாக இருந்த மாநிலம் தமிழகம்.

அதுமட்டுமல்ல குஜராத்தில் உள்ள 1 கோடி 20 லட்சம் வீடுகளில் 63 லட்சம் வீடுகளில் கேஸ் இணைப்பே இல்லை. ஆனால் 2006-11 ஆட்சிகாலத்தில் இலவச அடுப்புடன் கூடிய கேஸ் இணைப்புகளை வழங்கியது திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிதான்.

இவ்வாறு ஸ்டாலின் பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X