For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் “பர்ஸ்ட்”, விஜயகாந்த் “செகண்ட்” - சாலைவழி பிரச்சாரத்தில் சாதனை

|

சென்னை: எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்காக திமுக பொருளாளர் ஸ்டாலின் 8109 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக வாகனத்தில் பயணித்து 38 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார்.

இதன்மூலம் அதிக தூரம் வாகன பயணம் செய்து பிரசாரம் செய்த தலைவர்கள் பட்டியலில் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

Stalin and Vijayakanth reached higher campaign distance…

அடுத்தபடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5496 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளார்.

தனித்து போட்டி:

தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் லோக்சபா தேர்தலில் 35 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

எழுச்சி பேச்சு:

இந்த தேர்தலில் திமுகவின் பிரசார களத்தில் ஸ்டாலினின் ஆவேச பேச்சு அக்கட்சி தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

சாலை வழிப் பயணம்:

இந்நிலையில் ஸ்டாலினின் பிரசார பயணம் தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, " கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போதும் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போதைய அவர் பயணித்த தூரத்தை விட லோக்சபா தேர்தலில் கூடுதல் தூரத்திற்கு சாலை மார்க்கமாக பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளார்.

புதுக்கோட்டையில் முடிவு:

லோக்சபா தேர்தலுக்காக ஸ்டாலின் மூன்று கட்டமாக பிரசார பயணம் மேற்கொண்டார். அவரின் முதல்கட்ட பிரசாரம் கன்னியாகுமரியில் துவங்கியது. இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று புதுக்கோட்டையில் முடித்தார்.

40 தொகுதிகளில் பிரச்சாரம்:

புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளிலும் 229 சட்டசபை தொகுதிகளின் பொதுமக்களை ஸ்டாலின் சந்தித்துள்ளார். மாநிலம் முழுவதும் 448 இடங்களில் பேசியுள்ளார். 156 இடங்களில் பொதுமக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

2 தடவைதான் "ஹெலிகாப்டர்":

பெரிய அளவில் 38 இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து ஸ்டாலின் 8109 கி.மீ. சாலை மார்க்கமாக பயணித்துள்ளார். சென்னையிலிருந்து கோவைக்கும், திருச்சிக்கும் மட்டும் விமானத்தில் சென்றுள்ளார்.

முதலிடத்தில் ஸ்டாலின்:

அவர் பங்கேற்ற பெரிய அளவிலான பிரசார பொதுக்கூட்டங்கள் புதுச்சேரி மற்றும் திண்டுக்கல்லில் மட்டுமே நடைபெறவில்லை. இதன்மூலம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் அதிக தூரம் சாலை மார்க்கமாக வாகனத்தில் பயணித்து பிரசாரம் செய்த தலைவர்கள் பட்டியலில் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்" என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

"விஜி"க்கு ரெண்டாவது இடம்:

இதேபோல் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5496 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக பயணித்து பிரசாரம் செய்துள்ளார். மார்ச் 14 ஆம் தேதி திருவள்ளூர் (தனி) தொகுதியில் தன் முதல்கட்ட பிரசாரத்தை விஜயகாந்த் துவக்கினார்.

மூன்று நாட்கள் ரத்து:

28 ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் ஆலந்தூரில் முதற்கட்ட பிரசாரத்தை செய்தார். இதையடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதி தன் தேர்தல் பிரசாரத்தை அவர் மீண்டும் துவங்கினார். பிரசார வாகனத்தில் பழுது, தொண்டை வலி காரணமாக இடையில் மூன்று நாட்கள் தன் பிரசாரத்தை ரத்து செய்தார்.

நங்கநல்லூரில் நிறைவு:

நேற்று ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூரில் பிரசாரத்தை நிறைவு செய்தார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மொத்தம் 29 நாட்கள் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரிக்கு மட்டும் "லீவ்":

மாநிலம் முழுவதும் 5496 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக பயணித்து 89 இடங்களில் 3440 நிமிடங்கள் பேசியுள்ளார். கூட்டணி பிரச்னை காரணமாக புதுச்சேரி தொகுதியில் அவர் பிரசாரம் செய்யவில்லை.

English summary
Stalin and Vijayakanth get the first and second places respectively in the road way campaign for Lokshabha election 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X