For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை – சென்னை பிரீமியம் ரயில் ரத்து: கோடை சிறப்பு ரயில் இயக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை- சென்னை இடையே இயக்கப்பட இருந்த பிரீமியம் சிறப்பு ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்ததால் பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லை. இதனால் இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை-சென்னை சென்டிரலுக்கு ‘பிரீமியம்' வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06746) மே 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கடந்த 11ஆம் தேதி அறிவித்தது.

Summer special train for Tirunelvely – Chennai on May 2

கட்டணம் அதிகம்

பிரீமியம்' ரயிலுக்கு தட்கல் முன்பதிவு டிக்கெட் கட்டணம் போலவே கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் அதிகமாக இருப்பதால் இந்த சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லை.

ரயில் ரத்து

இதனையடுத்து 2ஆம் தேதி இயக்கப்படவிருந்த நெல்லை-சென்னை ‘பிரீமியம்' ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடை சிறப்பு ரயில்

அதற்கு பதிலாக நெல்லையிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் (06748) நெல்லையிலிருந்து வரும் 2ஆம் தேதி காலை 6.35 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 7.55 மணிக்கு சென்னை வந்தடையும்.

நிற்கும் இடங்கள்

நெல்லை-சென்னை கோடைகால சிறப்பு ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

English summary
Train No.06746 Tirunelveli - Chennai Central weekly Premium special scheduled to leave Tirunelveli o­n 02.05.2014, as announced earlier, stands cancelled. In lieu of the above cancelled train, the following summer special express train will be run o­n 02.05.2014 (Friday) from Tirunelveli to Chennai Central.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X