For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு ரஜினி 'வாய்ஸ்' கொடுப்பாரா?, கொடுத்தாலும் எடுபடுமா?

By Mathi
|

சென்னை: தமிழக தேர்தல் களத்தில் வழக்கம் போல ரஜினிகாந்த் பெயர் மீண்டும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. எப்படியும் தங்கள் அணியை ஆதரித்துவிடுவார் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் உலா வந்து கொண்டிருக்கின்றனர் பாஜக அணி.

மூப்பனார் முதல் மு.க. அழகிரி வரை எத்தனையோ அரசியல்வாதிகள் ஆதரவு கேட்டு ரஜினி வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆதரித்தாலும், மௌனம் சாதித்தாலும் அவர்கள் அனைவருக்கும் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் சம்பிரதாயமான வரவேற்பும், வழியனுப்புதலும் வழங்கப்படும்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிய ஒரு வாரமே இருகிறது.. இப்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினியை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்திருப்பது அரசியல் அரங்கில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரசிம்மராவ் சந்திப்பு

நரசிம்மராவ் சந்திப்பு

தேர்தல் நேரத்தில் ரஜினி அல்லது ரஜினியை முன்வைத்து பரபரப்பு ஏற்படுவது வழக்கமானதுதான். 1995ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நரசிம்மராவை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது குமுதம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. ரஜினி ஆதரவுடன் தமிழக சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால் 130 இடங்களைப் பெற முடியும் என்றது.

த.மா.கா. உதயம்

த.மா.கா. உதயம்

ஆனால் 1996ஆம் ஆண்டு நரசிம்மராவோ, அதிமுகவுடன்தான் கூட்டணி என்று அடம்பிடித்தார். வேறுவழியில்லாமல் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. அது திமுகவுடன் கூட்டணி வைத்து.

வாய்ஸ் கொடுத்த ரஜினி

வாய்ஸ் கொடுத்த ரஜினி

ரஜினிகாந்தும் திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக வாய்ஸ் கொடுத்தார். "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" என்பதுதான் அந்த வாய்ஸ். அதற்கு தமிழக மக்கள் மதிப்பும் அளித்து திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் அணியை வெல்ல வைத்தனர்.

மீண்டும் ஆதரவு

மீண்டும் ஆதரவு

1996,98ம் ஆண்டுகளில் லோக்சபா தேர்தல்களில் திமுக- த.மா.கா. அணிக்கே ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தார்.

சைலண்ட்டான ரஜினி

சைலண்ட்டான ரஜினி

1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுக்காமல் அமைதியாக இருந்தார்.

பாஜகவுக்கு வாய்ஸ்

பாஜகவுக்கு வாய்ஸ்

2004ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாய்ஸ் கொடுத்தார். ஆனால் பாஜக போணியாகவில்லை. அதன் பின்னர் வந்த தேர்தல்களில் வாய்ஸ் கொடுப்பதையே நிறுத்திவிட்டார்.

ரசிகர்களின் கூத்துகள்

ரசிகர்களின் கூத்துகள்

அதே நேரத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பது, ஆங்காங்கே கட்சி தொடங்குவது என்றெல்லாம் கூத்துகள் அரங்கேறும். இதையெல்லாம் ரஜினி பகிரங்மாகவே எதிர்த்து அறிக்கையும் வெளியிட்டபடி ஒதுங்கியே இருந்தார்.

மோடி திடீர் சந்திப்பு

மோடி திடீர் சந்திப்பு

இந்த நிலையில் 2011ம் ஆண்டு மே 16-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த மோடி, திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் ரஜினியுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொண்டது மோடிதான்.

எல்லாரும்தான் சந்திக்கிறார்கள்..

எல்லாரும்தான் சந்திக்கிறார்கள்..

அதே நேரத்தில் மோடி பேசுவது பற்றியெல்லாம் ரஜினி கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் ரஜினியை திமுக பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாளவன் என அனைத்து கட்சி தலைவர்களுமே சந்தித்து பேசுவது வழக்கமாக இருந்தது.

ரஜினியை முன்வைத்து..

ரஜினியை முன்வைத்து..

தேர்தல் நெருங்க நெருங்க மோடி- ரஜினி நட்பை வாக்காக பயன்படுத்த தமிழக பாஜக நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதனால் மோடி சென்னை வரும்போதெல்லாம் ரஜினியை சந்திக்கப் போகிறார் போகிறார் என்று சொல்லி வந்தனர்.

அவ்வப்போது கிளப்பிவிடுவது..

அவ்வப்போது கிளப்பிவிடுவது..

மோடி இதற்கு முன்பு திருச்சி, சென்னை வந்த போதெல்லாம் இப்படித்தான் செய்திகள் பரப்பப்பட்டு பொய்யாகிப் போகின. இந்தப் பின்னணியில் பார்த்தால் "வேறுவழியே" இல்லாமல் மோடியை சந்திக்க ரஜினி ஒப்புக் கொண்டதாகவே தற்போது தெரிகிறது.

அரசியல் சந்திப்பே இல்லையே..

அரசியல் சந்திப்பே இல்லையே..

அதுவும் மோடி சந்தித்த போதும் கூட அவர் முன்னிலையே "அரசியல் சந்திப்பு" இல்லை.. தனிப்பட்ட சந்திப்புதான் என்று பட்டும்படாமல் பேசி ஒதுங்கிக் கொள்ளத்தான் ரஜினி விரும்பியது வெளிப்படுத்துகிறது. ஆனால் தமிழக பாஜகவினர்தான் மோடியை சந்தித்துவிட்டதாலேயே தங்களுக்கே ஆதரவு என்று பேசி வருகின்றனர்.

வைகோவின் விளையாட்டு

வைகோவின் விளையாட்டு

அத்துடன் இன்னொரு கூத்தையும் வைகோ அரங்கேற்றி வைத்திருக்கிறார். மோடியை ஆதரிக்கக் கோரி போனவாரமே நான் ரஜினியை சந்தித்தேன் என்று அவரது அரசியல் இமேஜூக்கு சற்றும் பொருந்தாத ஒரு 'அரசியல்' கூத்தை நுழைத்துவிட்டிருக்கிறார்.

ரஜினி போய் விஜயகாந்த்..

ரஜினி போய் விஜயகாந்த்..

ரஜினிகாந்த் என்ற நடிகரின் ஆளுமை திரை உலகத்தில் நிலையானது.. எவரும் மறுக்கப் போவதில்லை.. ரஜினிகாந்த் என்ற நடிகர் அரசியலில் கோட்டை விட்ட இடத்தை விஜயகாந்த் என்ற நடிகர் பிடித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.. இதை ரஜினி நன்றாகவே அறிந்திருப்பார்..

வாய்ஸ் பொய்த்தால்...

வாய்ஸ் பொய்த்தால்...

இதனால்தான் தேர்தல்களில் "வாய்ஸ்'" கொடுக்கும் வேலை எதுவும் அவர் செய்வதும் இல்லை.. அது எடுபடாமல் போனால் தனது செல்வாக்கை தானே சரிய வைத்தது மாதிரி ஆகிவிடும் என்பதை அறியாதவரல்ல ரஜினி..

சந்திப்புதான்.. வரலாறு அல்ல

சந்திப்புதான்.. வரலாறு அல்ல

அதனால் ரஜினி- மோடி; ரஜினி- வைகோ சந்திப்புகள் "சந்திப்புகள்" தானே தவிர சரித்திரத்தை புரட்டிப் போட்டுவிடும் ஒரு வரலாற்று சந்திப்பு அல்ல..

English summary
We all know about Superstar Rajinikanth's huge fan following. For more than a decade, his fans want him to join politics but he has always evaded the topic this time also that only will happen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X