For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கர மடத்துக்கு போய் சங்கராச்சாரியாரிடம் ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும்: மீண்டும் சு.சாமி

By Mathi
Google Oneindia Tamil News

Swamy demands apologise from Jaya on Seer case
காஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை தொடர்பாக வழக்கு தொடர்ந்ததற்காக சங்கர மடத்துக்கு நேரில் சென்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரை புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு வெளியான போதே தமிழக முதல்வர் ஜெயலலிதா, சங்கராச்சரியாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் புதுவை நீதிமன்றத்தில் இருந்து நேராக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை காஞ்சிபுரம் திரும்பினார். அவருக்கு காஞ்சிபுரத்தில் பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமியும் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்திரர் சரஸ்வதி சுவாமி மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தபோதே, இந்த வழக்கு தள்ளுபடியாகும் என்று நான் கூறியிருந்தேன்.

சிலரை திருப்திப்படுத்தவே அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் விடுவிக்கப்பட்டது, இந்து மதத்துக்கு கிடைத்த வெற்றி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமது தவறை உணர்ந்து, சங்கர மடத்துக்கு நேரில் வந்து சங்கராச்சாரியார்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அரசின் கடமை. தமிழக அரசால் முடியவில்லை என்றால், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றலாம் என்றார்.

English summary
BJP leader Dr Subramanian Swamy said, Jayalalithaa should apologise for this. What she has done to the seer is an insult to the Hindu religion" on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X