For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டூவீலரில் இனிமேல் மாணவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது - கல்வித்துறை திடீர் தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Tamil Nadu government ban two wheelers for school students
சென்னை: பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தமிழக பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கு மோட்டார் சைக்கிள்களில் வரக்கூடாது என மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மீறி வாகனங்களை ஓட்டி வரும் மாணவர்களை கண்டிப்பதுடன், அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மீது நடவடிக்கை

இதில் கவனக்குறைவுடன் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அந்த பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பல பள்ளிகளில் மாணவர்கள் சைக்கிள்களுக்குப் பதில் ஸ்கூட்டி உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களிலும் வர ஆரம்பித்துள்ளனர். இதை பள்ளி நிர்வாகங்கள் தடுப்பதில்லை. உரிய ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் இப்படி இரு சக்கர வாகனத்தில் வருவது அவர்களுக்கும், சாலைகளில் செல்லும் பிறருக்கும் ஆபத்தாக அமைந்து விடுகிறது.

இந்த நிலையில்தான் தற்போது இந்த அதிரடி உத்தரவை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

English summary
Directorate of School Education has asked schools to ban students from coming to educational institutions on their own two-wheelers. The move follows the occurrence of accidents involving students in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X