For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக "சரக்கு" உற்பத்தியும் விற்பனையும் எவ்வளவு தெரியுமா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்ன்னை: இந்தியாவிலே மதுபான விற்பனையில் தமிழகம்தான் வரலாறு காணாத வருமானம் ஈட்டி இதர மாநிலங்களுக்கு முன்னோடி(!) மாநிலமாக உருவெடுத்துள்ளது.

ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருகை தந்து 'மதுபான' சரித்திரத்தை ஆராய்ந்து செல்கின்றனர் அதிகாரிகள். தற்போது கிடைக்கும் வருவாய் போதாதென்று கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக அதிரடியாக மதுபான விலையை உயர்த்தியும் இருக்கிறது தமிழக அரசு.

Tamil Nadu liquor production in last 10 years

இதற்கு நேர் எதிராக கேரள அரசோ, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மதுபான உற்பத்தி விவரம்:

  • 2001-02 ஆம் ஆண்டில் 13.32 கோடி லிட்டர் மதுவும் 5.06 கோடி லிட்டர் பீரும் உற்பத்தி செய்யப்பட்டது.
  • 2002-03 ஆம் ஆண்டில் இது 11.62 கோடி லிட்டர் மற்றும் 4.32 கோடி லிட்டர் (பீர்) என குறைந்தது.
  • ஆனால் 2003-04 ஆம் ஆண்டு முதல் மது உற்பத்தியில் அதிரடி ஏறுமுகம்தான். அந்த ஆண்டு 14.04 கோடி லிட்டர் மதுவும் 5.96 லிட்டர் பீரும் உற்பத்தியானது.
  • 2005-06ஆம் ஆண்டில் இது அதிரடியாக 19.86 கோடி லிட்டராகவும் 10.62 லிட்டராகவும் அதிகரித்தது.
  • 2006ஆம் ஆண்டு முதல் 2008-09 ஆம் ஆண்டு வரை மது உற்பத்தி ஆண்டுக்கு 4 கோடி லிட்டர் அதிகரித்தது. பீர் உற்பத்தியானது 2 கோடி முதல் 3 கோடி லிட்டர் வரை அதிகரித்தது.
  • 2008-09ம் ஆண்டு மது உற்பத்தி 31.08 கோடி லிட்டராக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு 2009-10-ல் இது 36.66 கோடி லிட்டராக எகிறியது.
  • அதன் பின்னர் 2010-11ஆம் ஆண்டில் உச்ச அளவாக 42.72 கோடி லிட்டர் மது உற்பத்தியானது. பீர் உற்பத்தியோ 19.03 கோடி லிட்டரானது.
  • 10 ஆண்டுகால வருவாய் விவரம்:
  • -2003-04 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ3,639 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.
  • -2007-08 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருந்தது.
  • 2007-08ஆம் ஆண்டு மதுபான விற்பனை மூலமான அரசுக்கான வருவாய் ரூ 8,821 கோடியாக இருந்தது.
  • 2010-11ஆம் ஆண்டு இந்த வருவாயானது ரூ14, 965 கோடியை எட்டியது.
  • -2012-13 ஆம் ஆண்டிலோ உச்சகட்டமான ஆண்டுக்கு ரூ21,680 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.
English summary
According to govt data, Tamilnadu's liquor production ratio was very very high from 2001 to 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X