For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகிறது - பட்ஜெட்டில் ரூ. 150 கோடி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

நெல்லை: நேற்றைய தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நெல்லையில் உயர் தர பல்நோக்கு மருத்துவமனை அமைக்க 150 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், நெல்லையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க 150 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நெல்லையில் தற்போதுள்ள அரசு மருத்துவனையை தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamilnadu budget: Rs 150 cr sanctioned to Nellai GH

நெல்லை மாவட்ட மக்களுக்காக நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தனியார் மருத்துவமனைக்கு ஈடாக உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இங்கு உள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வருவது வழக்கம்.

இதனால் மருத்துவமனை வாளகம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும். இங்கு 20க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. ஆயினும் உயர் சிகிச்சை பிரிவில் தேவையான கருவிகளின் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்போது புதிதாக பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு சொந்தமான காலி மனைகள் நிறைய உள்ளன. இதனால் மருத்துவமனையை மல்டி ஸ்பெசலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் வசதியாக இருக்கும்.

இதனால் தற்போது இருக்கும் சிறப்பு பிரிவில் உயர் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தபட வாய்ப்பு இருக்கும். கூடுதலாக மருத்துவமனை கட்டிடங்கள், அறுகை சிகிச்சை கட்டிடங்கள், மருத்துவர்களும் நியமிக்கப்படுவார்கள். எனவே அரசின் இந்த அறிவிப்பு மருத்துவ கல்லூரிக்கு பொன் விழா பரிசாக அமைய உள்ளதாக பலரும் தெரிவித்தனர்.

அதன் பலனாக இப்பொழுது இந்த பட்ஜெட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

English summary
TN govt has sancdtioned Rs 300 crores to make Tanjore and Nellai GH as mulit speciality hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X