For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிற்க முடியாமல் விழுந்து, தவழ்ந்து, மண்ணில் புரண்டு.. ஒரு 'குடிகாரர்' படும் அவலத்தைப பாருங்கள்..!!

Google Oneindia Tamil News

கரூர்: குடியின் கொடுமை நாளுக்கு நாள் சமூகத்தை அரித்து சல்லடையாக்கி வருகிறது. யாருமே இதன் கொடூரத்தை உணராமல் உள்ளனர். குடிப்பது ஒரு ஸ்டேட்டஸ் என்று சிலர் கருதிய காலம் போய் இப்போது மரியாதை கெட்டு, மானம் போய் நடுத் தெருவில், சாலையில், மண்ணில் புரண்டு பன்றிக்கு சமமான நிலைக்கு மனிதன் போகும அளவுக்கு கேவலமாகியுள்ளது.

யார்தான் குடிப்பது என்று விவஸ்தையே இப்போது இல்லை. பள்ளி போகும் மாணவர்கள் முதல் பல் போனவர்கள் வரை குடித்துக் குடித்து அழிய ஆரம்பித்துள்ளனர்.

மொடாக்குடி, புத்தியைக் கெடுத்து, மானத்தைக் கெடுத்து, சமூக அந்தஸ்தைக் கெடுத்து அழிவில்தான் கொணடு போய் விடும் என்பதை குடிப்பவர்கள் மறந்து விடுவதுதான் வேதனை.

குடியைக் கெடுக்கும் குடி

குடியைக் கெடுக்கும் குடி

குடிப் பழக்கம் குடிப்பவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்து விடுகிறது என்பதை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். குடிகார கணவர்களைக் கட்டிக் கொண்டு எத்தனை பெண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதை கதை கதையாக படித்துக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் குடிப்பழக்கத்தை பலர் கைவிடுவதாக இல்லை.

மாணவர்களையும் பாதித்த குடி

மாணவர்களையும் பாதித்த குடி

இப்போது பள்ளி மாணவர்களும் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

கரூர் அவலம்

கரூர் அவலம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் வாத்து கறிக்கடைக்கு பஞ்சமில்லை. அந்த் கடைக்கு சாப்பிட வந்த சில பள்ளி மாணவர்கள் ஜாலியாக அமர்ந்து பீர் சாப்பிட்ட காட்சி பதற வைத்தது.

கோடை விடுமுறைக்கு பீர் விருந்து

கோடை விடுமுறைக்கு பீர் விருந்து

கோடை விடுமுறை விட்டு விட்டதால், இந்த மாணவர்ள் வாத்து கறிக்கடையில் கோடைக்கு இதமாக ஹாயாக பீர் குடித்தது பார்ப்பவர்களை அதிர வைத்தது.

மாணவர்களுக்கு மது விற்காதீர்கள்...ப்ளீஸ்

மாணவர்களுக்கு மது விற்காதீர்கள்...ப்ளீஸ்

இனிமேலாவது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டாயமாக மது விற்பதில்லை என்ற முடிவை அரசு எடுத்தாக வேண்டும். வளரும் நிலையிலேயே இவர்கள் தறி கெட்டுப் போவதன் மூலம் அப்பாவி பெற்றோர்களின் சாபத்தைத்தான் அரசு வாங்கிக் கட்டிக் கொள்கிறது.

விலங்கினும் கீழாக..

விலங்கினும் கீழாக..

இதோ இந்தக் காட்சியைப் பாருங்கள். ஒரு மனிதன் விலங்கை விட கீழான நிலைக்குப் போய் விட்டான்.. இந்த கேடு கெட்ட குடியால்.

எழ முடியாமல்

எழ முடியாமல்

போதையில் தடுமாறி கீழே விழுந்து எழ முடியாமல் தவிக்கும் அகோரம்....

தவழ்ந்து உருண்டு.. விழுந்து...

தவழ்ந்து உருண்டு.. விழுந்து...

எழ முடிந்து முடியாமல் கீழே விழுந்து பின்னர் குழந்தை போல தவழ்ந்து, ஊரெல்லாம் கூடி வேடிக்கை பார்த்தாலும் உள்ளே போன அந்த மது அரக்கன் இந்த மனிதனை வெட்கத்தை உதறிப் போடச் செய்து விட்டது கொடுமைதான்....

எப்போது திருந்தப் போகிறார்களோ இந்த மொடாக் குடிகாரர்கள்.!

English summary
Tasmac shops are eroding the lives of the students and youngsters. Here are some example of the serious condition of the today's youth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X