For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழியர்களை ஓட்டுப்போட அனுமதிக்காத டி.சி.எஸ்: மதிமுக புகார்

By Mayura Akilan
|

திருவள்ளூர்: வாக்குப்பதிவு நாளன்று டாடா கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் (டிசிஎஸ்) நிறுவனம் தனது ஊழியர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று மதிமுக புகார் தெரிவித்துள்ளது.

மதிமுகவின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.எஸ்.ஆர் செங்குட்டுவன், அளித்துள்ள புகார் மனுவில், கூறியுள்ளதாவது: டிஎல்.எப் ஐ.டி பார்க்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் 700 ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்கவில்லை.

TCS employees not allowed to vote, MDMK complains to EC

ஊழியர்களை ஜனநாயகக் கடமையாற்ற விடவில்லை. அவர்களை வாக்களிக்க விடாமல் பணி செய்ய வற்புறுத்தியுள்ளனர். எனவே டி.சி.எஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மதிமுகவின் இந்த புகாருக்கு டி.சி.எஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் டி.சி.எஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊழியர்கள் ஜனநாயகக் கடமையாற்றுவதை டி.சி.எஸ் ஒரு போதும் தடுக்காது என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட 10 ஐ.டி நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu's MDMK Thursday complained to the Election Commission against software major Tata Consultancy Services Ltd (TCS) reportedly not allowing its employees to exercise their democratic right to vote. The company has denied the charge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X