For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா.வில் ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது- சென்னையில் செப்.3-ல் டெசோ ஆர்ப்பாட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 3-ந் தேதி தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பான டெசோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொதுச்செயலர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • ஈழத் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலத்தை மத்திய அரசு உடனடியாக விரைவுபடுத்த வேண்டும்
  • தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இலங்கை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 62 படகுகளை மீட்க வேண்டும்
  • நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது.
  • இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. மனித உரிமைகள் குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும்
  • டெசோ கூட்டத்தில் நிறைவேற்ற இந்த தீர்மானங்களை முன்வைத்து சென்னையில் செப்டம்பர் 3-ந் தேதி "பெருந்திரள்" ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.


    teso

English summary
DMK lead TESO urges UN should not allow Srilankan President Rajapaka to Speak in Annual Meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X