For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - திருவாரூர் கலெக்டர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூரில், மர்மநபர்களால் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர் மதிவாணன்.

திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் மதிவாணன். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது இவரது வழக்கம். அந்தவகையில், நேற்று காலை நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே முட்புதரில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு மதிவாணன் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மதிவாணன் முட்புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே பிறந்து சில நாட்களே ஆன அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டார். இதையடுத்து அவர், குழந்தையை முட்புதர்களில் இருந்து பத்திரமாக மீட்டு, தனது கார் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சைக்காக அக்குழந்தை அனுமதிக்கப் பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கலெக்டர் மதிவாணன் கூறியதாவது :-

நான் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது விளையாட்டு மைதானம் அருகே முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தேன். அப் போது ஒரு அழகான ஆண் குழந்தை கிடந்தது. இந்த குழந்தை திருவாரூர் மருத்து வமனை டாக்டர்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஆதரவற்ற குழந்தையாக இருப்பதால், சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத் தில் சேர்க்கவும், அதை தொடர்ந்து அரசு அங்கீகாரம் பெற்ற திண்டுக்கல் கஸ் தூர்பாகாந்தி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பிறந்து சில நாட்களே ஆனது என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதால், அந்த குழந்தையின் தாய் யார், இவ்வாறுக் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றார்கள் என்பது பற்றி திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Thiruvarur District collector Mathivanan has found a newborn baby in a bush, while he went for walking. He rescued the baby and admitted the baby in a hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X