For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்டுக் கொட்டகையில் புகுந்த புலி - வளைத்துப் பிடித்த வனத்துறையினர்!

Google Oneindia Tamil News

கூடலூர்: நீலகிரியில் ஆட்டுக் கொட்டகைக்குள் புகுந்த புலியை வனத்துறையினர் லாவகமாக வளைத்துப் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது.

இங்கு முதுகுளி, நாகம்பள்ளி, மண்டக்கரா, நம்பிக்குன்னு, புலியாளம் உள்பட ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.

ஆடுகள் வளர்ப்பு:

ஆடுகள் வளர்ப்பு:

நம்பிக்குன்னு கிராமத்தை சேர்ந்த முரளிதரன் என்ற விவசாயி தனது வீட்டில் கொட்டகை அமைத்து 15 ஆடுகள் மற்றும் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.

அலறிய ஆடுகள்:

அலறிய ஆடுகள்:

நேற்று முன்தினம் இரவு முரளிதரன், அவரது மனைவி யமுனா மற்றும் குழந்தைகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். விடியற்காலை 4 மணி அளவில் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது.

கொட்டகையில் சத்தம்:

கொட்டகையில் சத்தம்:

இதனால் தூங்கிக்கொண்டிருந்த முரளிதரன், யமுனா ஆகியோர் ஆடுகள் அடைக்கப்பட்டு இருந்த ஆட்டு கொட்டகையை திறந்து பார்த்தனர்.

உள்ளே புலி:

உள்ளே புலி:

அப்போது கொட்டகையின் உள்ளே புலி ஒன்று ஆட்டை அடித்து கொன்று இறைச்சியை தின்றுகொண்டு இருந்தது. இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முரளிதரனை கண்டதும் புலி உறுமியது.

அடைக்கப்பட்ட புலி:

அடைக்கப்பட்ட புலி:

ஆட்டு கொட்டகை திறக்கப்பட்டதால் உள்ளே இருந்த ஆடுகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடின. உடனே முரளிதரன் ஆட்டு கொட்டகையை அடைத்தார். மேலும் புலி கொட்டகையை விட்டு வெளியே சென்று விடாமல் இருக்க வலைகளை போட்டு மூடினார்.

வனத்துறையினர் வியூகம்:

வனத்துறையினர் வியூகம்:

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கொட்டகைக்குள் இருந்த புலியை பிடிக்க வியூகம் வகுத்தனர். அதன்படி இரும்பு கூண்டு கொண்டு வரப்பட்டு ஆட்டு கொட்டகையின் வாசலில் வைக்கப்பட்டது.

காயங்கள் அதிகம்:

காயங்கள் அதிகம்:

பின்னர் கொட்டகையின் கதவை வனத்துறையினர் திறந்தனர். ஆனாலும் புலி எழுந்து வராமல் படுத்தே கிடந்தது. இதனால் அதன் உடலில் காயங்கள் இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதினர்.

சுருக்கு கம்பிகள்:

சுருக்கு கம்பிகள்:

எனவே சுருக்கு கம்பிகள் மூலம் புலியை பிடித்து கூண்டுக்குள் அடைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சுருக்கு கம்பிகள் மூலம் புலியின் அருகே இறந்து கிடந்த ஆட்டின் உடலை வெளியே எடுத்தனர்.

அசைக்க முடியாமல் தவிப்பு:

அசைக்க முடியாமல் தவிப்பு:

இதனால் ஆவேசமான புலி திடீரென்று ஆட்டின் உடலை கடித்து தின்றது. இதையடுத்து புலியின் மீது சுருக்கு கம்பியை வனத்துறையினர் வீசினர். இதில் புலியின் கால்கள் மற்றும் தலை சிக்கியது. இதனால் புலியால் உடலை அசைக்க முடியாமல் நின்றது.

லாவகமாக அடைப்பு:

லாவகமாக அடைப்பு:

உடனே வனத்துறையினர் கம்பளி போர்வைகளை கொண்டு வந்து புலி மீது போர்த்தி லாவகமாக கொட்டகையை விட்டு வெளியே இழுத்து வந்து இரும்பு கூண்டுக்குள் அடைத்தனர்.

புலிக்கு தீவிர சிகிச்சை:

புலிக்கு தீவிர சிகிச்சை:

பகல் 12 மணி அளவில் புலியை அடைத்திருந்த இரும்பு கூண்டை வனத்துறையினர் அங்கிருந்து எடுத்து முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவ குழுவினர் புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விரைவில் குணம்:

விரைவில் குணம்:

மேலும், கிட்டதட்ட 2 கிலோ இறைச்சியை சாப்பிட்டுள்ளதால் புலி விரைவில் குணமடைந்துவிடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Tiger killed a goat in Nilgiri farmer’s home and forest rangers trap that tiger and gave treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X