For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பிரதமராக வாய்ப்பே இல்லை… திருச்சி, திருப்பூர் வாக்காளர்கள்!

By Mayura Akilan
|

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தி தினந்தோறும் ஒவ்வொரு தொகுதியாக ஒளிபரப்பி வருகிறது

பல்வேறு தொகுதிகளின் கருத்துக்கணிப்புகளை இதுவரை பார்த்துள்ளோம். இன்றைக்கு திருச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் விபரங்களைப் பார்க்கலாம்.

மத்தியில் ஆளும் அரசு

மத்தியில் ஆளும் அரசு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

திருச்சி: ஆமாம் - 38%, இல்லை - 62%

திருப்பூர்: ஆமாம் - 15% இல்லை - 85%

ஐ.மு.கூ அரசுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களா?

ஐ.மு.கூ அரசுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களா?

தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,

திருச்சி: ஆமாம் - 30% இல்லை - 70%

திருப்பூர்: ஆமாம் : 19% இல்லை - 80 % பதில்

இல்லை - 1 %

யாருக்கு வாக்கு?

யாருக்கு வாக்கு?

மாநில கட்சியா தேசிய கட்சியா யாருக்கு உங்கள் வாக்கு?

திருச்சி: மாநில கட்சி - 70% தேசிய கட்சி - 30%

திருப்பூர்: மாநிலக்கட்சி - 47% தேசியக்கட்சி - 53%

தேசிய கட்சியில் யாருக்கு?

தேசிய கட்சியில் யாருக்கு?

தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,

திருச்சி: பாஜக - 58%, காங்கிரஸ் -42%

திருப்பூர்: பாஜக - 69 % காங்கிரஸ் - 23% கம்யூனிஸ்ட் - 5% ஆம் ஆத்மி கட்சி - 3%

மாநிலக் கட்சி யாருக்கு?

மாநிலக் கட்சி யாருக்கு?

மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?

திருச்சி: அதிமுக - 46%, திமுக - 45 %, தேமுதிக -8 %, மற்றவர்கள் -1%

திருப்பூர்: அதிமுக - 61% திமுக - 28% மற்றவர்கள்- 11%

அடுத்த பிரதமர்?

அடுத்த பிரதமர்?

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்

திருச்சி: நரேந்திர மோடி - 53% ராகுல்காந்தி - 24% ஜெயலலிதா - 21%

மற்றவர்கள் - 2%

திருப்பூர்: நரேந்திரமோடி - 50 ராகுல்காந்தி - 14% ஜெயலலிதா - 24%

பதில் இல்லை - 12%

இந்தியாவின் மீட்பர் யார்?

இந்தியாவின் மீட்பர் யார்?

தற்போதைய சிக்கல்களில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் திறன் யாருக்கு அதிகம் உள்ளது என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்

திருச்சி: நரேந்திர மோடி - 52% ராகுல்காந்தி - 27% ஜெயலலிதா - 21%

திருப்பூர்: நரேந்திர மோடி- 52% ராகுல்காந்தி - 14 % ஜெயலலிதா 24% மற்றவர்கள் 10%

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?

ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,

திருச்சி: தெரியும்- 70%, தெரியாது - 30%

திருப்பூர்: தெரியும் - 81% தெரியாது- 19%

ஆம் ஆத்மிக்கு வாக்கு

ஆம் ஆத்மிக்கு வாக்கு

ஆம் ஆத்மி கட்சியை தெரிந்தவர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பீர்களா?

திருச்சி: ஆமாம் - 32%, இல்லை - 68%

திருப்பூர்: ஆமாம் - 4% இல்லை - 96%

ஜெயலலிதா பிரதமராக முடியுமா?

ஜெயலலிதா பிரதமராக முடியுமா?

ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,

திருச்சி: ஆமாம் - 33%, இல்லை - 63%, வாய்ப்பு இருக்கலாம் - 4%

திருப்பூர்: ஆமாம் -17% இல்லை - 51 % இருக்கலாம் - 32%

English summary
According to the survey conducted by Thanthi TV in Tiruchi and Tirupur Lok Sabha constituency voters has not supported to the TN chief minister Jayalalitha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X