For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்டியைத் தடுக்கும் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் சீனியைக் கைது செய்க.. வக்கீல்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

துத்துக்குடி: வேட்டி அணிந்து வரக்கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞர்களை சென்னை கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் திருப்பி அனுப்பியதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் வேட்டி அணிந்து பணிக்கு சென்றனர்.

Tuticorin lawyers protest against Srinivasan

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் தனியார் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வேட்டி, சட்டை அணிந்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர் காந்தி மற்றும் வழக்கறிஞர்களை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டசபையிலும் இது எதிரொலித்தது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் வேட்டி, சட்டை அணிந்து பணிக்கு சென்றனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்த நீதிபதியை அவமரியாதை செய்த கிரிக்கெட் கிளப்புக்கு தடை விதிக்க வே்ணடும், அதன் தலைவர் சீனிவாசனை கைது செய்ய வே்ணடும் என அவர்கள் கோஷமிட்டனர்.

English summary
Tuticorin lawyers staged a protest against TNCA president Srinivasan for barring dhoti wearing persons in TNCA club.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X