For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய அணு உலைகளை தடுத்து நிறுத்துங்கள்: கருணாநிதியை சந்தித்து உதயகுமார் வேண்டுகோள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிதாக அணு உலைகளை அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Udayakumar meets Karunanidhi

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளை எதிர்த்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் ஆண்டுக் கணக்கில் போராடினர். இருப்பினும் அணு உலைகள் செயல்படத் துவங்கின.

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் உதயகுமார் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் புதிதாக அணு உலைகளை அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 புதிய அணு உலைகள் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என்று நான் திமுக தலைவர் கருணாநிதியை கேட்டுக் கொண்டேன் என்றார்.

English summary
People's Movement Against Nuclear Energy convenor Udayakumar met DMK supremo Karunanidhi and requested him to stop the centre from constructing new nuclear reactors in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X