For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசிஎஸ் பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

Uma Maheswari's case adjourned for tomorrow
சென்னை: ஐ.டி., பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள டி.சி.எஸ்., நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (23). கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி அலுவலத்தில் இருந்து புறப்பட்ட உமா மகேஸ்வரியை வடமாநிலத்தவர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

உமா மகேஸ்வரி விவகாரத்தில் போலீஸ் காட்டிய அலட்சியத்தால், பிப்ரவரி 22ம் தேதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலேயே அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல் (24), ராம் மண்டல் (21), உஜ்ஜல் மண்டல் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை, மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், நேற்று நீதிபதி ஆனந்தி முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம நிர்வாக அலுவலர் உட்பட இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ஆனந்தி.

English summary
The district women court has adjourned the IT girl Uma Mahehswari's case for tomorrow. Uma Maheswari was raped and murdered few months ago near Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X