For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டாசு தொழிலாளர்களிடம் திண்ணைகளில் வாக்கு சேகரிக்கும் வைகோ மகன் வையாபுரி

By Mayura Akilan
|

சிவகாசி: விருதுநகர் தொகுதியில் வைகோவிற்கு வாக்களித்தால் மட்டுமே பட்டாசு தொழிலை பாதுகாக்க முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி கூறியுள்ளார்.

வைகோவின் மகன் துரை வையாபுரி நேற்று 19.4.2014 அன்று சிவகாசியில் இருசக்கர வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இன்று சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்குச் சென்று இரண்டாயிரம் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

திண்ணைப் பிரசாரம்

திண்ணைப் பிரசாரம்

பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களிடம் திண்ணை பிரசாரம் செய்தார் துரை வையாபுரி

சீனா பட்டாசு வந்துருச்சி

சீனா பட்டாசு வந்துருச்சி

பட்டாசு பணியாற்றும் பெண் தொழிலாளர்களிடம் சீனா பட்டாசினால் ஏற்படும் பாதிப்புகள், அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் பாதிப்பு குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறினார்.

வேலை இல்லையே

வேலை இல்லையே

அங்கிருந்த பெண்கள்.... பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதை எடுத்துக் கூறினர்.

குறைகள் நிவர்த்தியானது

குறைகள் நிவர்த்தியானது

வாஜ்பாயி அவர்கள் பிரதமராக இருந்தபோது, பட்டாசு ஆலையின் நிர்வாகத்தினரை அழைத்துச் சென்று அவரிடம் தங்களது குறைகளை எடுத்துக்கூறி, அந்தக் குறைகளை வைகோ அவர்கள் நிவர்த்தி செய்தார்.

சிக்கலை தீர்த்த வைகோ

சிக்கலை தீர்த்த வைகோ

2004 இல் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் எம்.பி.யாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்களை, அப்போது அமைச்சராக இருந்த கமல்நாத் அவர்களுடன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சிக்கலினை தீர்த்து வைத்தார்.

மோடி தடுப்பார்

மோடி தடுப்பார்

நரேந்திர மோடி சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் வருவதை தடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு

பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு

வைகோ அவர்களை ஆதரித்து பம்பரம் சின்னத்திற்கு வாக்களித்தால் பட்டாசு தொழிலை பாதுகாக்க முடியும் என்று துரை வையாபுரி தொழிலாளர்களுக்கு எடுத்துக் கூறி பிரசாரம் செய்தார்.

English summary
MDMK leader Vaiko's son Durai Vaiyapuri has jumped into the poll bandwagon to campaign for his father who is contesting from Virudhunagar constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X