For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்டர்நெட் இளைய தலைமுறைக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

|

சென்னை: புதிய வாக்காளர்களான இளம் தலைமுறைக்கு திக.க. தலைவர் கி.வீரமணி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இளைஞர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது...

இன்டர்நெட் இளைஞர்களே !

இன்டர்நெட் இளைஞர்களே !

இன்டர்நெட் இளைஞர்களே ! பதினெட்டு வயது நிரம்பி இருக்கின்ற, நீங்கள் புதிதாக வாக்களிக்கப் போகிறீர்கள் மகிழ்ச்சி.

நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்

நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்

நீங்கள் வெறும் இன்டர்நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் கணினியைப் பார்க்கக் கூடிய அளவிற்கு செய்த பெருமை. திராவிடர் இயக்கத்தை சார்ந்தது. உருவாக்கிய பெருமை தந்தை பெரியாரைச் சார்ந்தது.

குப்பன் மகன் சுப்பன்

குப்பன் மகன் சுப்பன்

தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வியை அழித்திருக்காவிட்டால் இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன் சுவிட்சர்லாந்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருந்து கணினியை தட்டிக் கொண்டு இருக்க முடியாது.

மோடிகள் வந்தால் நாடு பழைய கருப்பனாக மாறும்

மோடிகள் வந்தால் நாடு பழைய கருப்பனாக மாறும்

நீங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.களின் வரலாற்றை, அவர்களின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மீண்டும் மோடிகள் ராஜ்ஜியம் வந்தால் மறுபடியும் நாடு பழைய கருப்பனாக மாறும்.

அதனால் இளைஞர்களே...

அதனால் இளைஞர்களே...

நாடு மனுதர்மத்திற்கு செல்லும். குலதர்மத்திற்கு செல்லும். அதனால், இளைஞர்களே! மோடியின் வளர்ச்சியிலே மயங்கி, மோடியின் வலையிலே சிக்கி சீரழிந்து விடாதீர்கள். மோடி அணியை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்

வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்

உங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஆயுதம். அறிவாயுதம் அதை சரியாகப் பயன்படுத்துங்கள்.

நடிகர் அல்லவா மோடியிடம் வர வேண்டும்

நடிகர் அல்லவா மோடியிடம் வர வேண்டும்

மோடி அலை அடிக்கிறது என்றால், மோடி நடிகரிடம் டீ சாப்பிடுவதற்கு, அப்பாயின்மெண்ட் வாங்க மூன்று மாதம் முயற்சி ஏன் எடுக்க வேண்டும்? நடிகர் அல்லவா மோடியைத் தேட வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
DK leader K Veeramani has urged the youth to vote sensible in the Loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X