For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன நடக்குதுன்னே விஜயகாந்த்துக்குத் தெரியலை.. விந்தியா கிண்டல்

|

ஈரோடு: தமிழகத்தில் தற்போது என்ன தேர்தல் நடக்கிறது என்றே விஜயகாந்த்துக்குத் தெரியவில்லை என்று நடிகை விந்தியா மறுபடியும் விஜயகாநத்தைக் கிண்டலடித்துள்ளார்.

கொஞ்சும் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கும் விந்தியாவுக்கு பிரசாரத்தின்போது நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

குறிப்பாக விஜயகாந்த்தையும் மற்றவர்களையும் அவர் விமர்சித்துப் பேசுவது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கோபி அருகே உள்ள பொலவ காளிபாளையம் பகுதியில் திருப்பூர் அதிமுக. வேட்பாளர் சத்யபாமாவை ஆதாத்து அவர் பேசினார். விந்தியாவின் பேச்சிலிருந்து...

மக்களுக்காக பாடுபடுவர்

மக்களுக்காக பாடுபடுவர்

தமிழக மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். இப்படி நாள்தோறும் நாட்டுமக்களின் நலனுக்காக பாடுபடுபவர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதியோ தமிழர்களை ஏமாற்றியவர்.

கைவிட மாட்டேன் என்று சொல்லி விட்டு

கைவிட மாட்டேன் என்று சொல்லி விட்டு

தமிழர்களை கைவிட மாட்டேன் என்று அவர் சொன்னதை கேட்டு 2006-ல் மக்கள் ஓட்டு போட்டார்கள்.

உலக ஊழல் செய்தார்

உலக ஊழல் செய்தார்

ஆனால் தமிழர்களை கைவிட்டு உலக அளவிலான ஊழல் செய்தவர் கருணாநிதி. தனது குடும்பத்தினருக்கு மட்டுமே அவர் உழைத்துள்ளார்.

கட்சிக்காரர்களையே காப்பாற்றத் தெரியாத விஜயகாந்த்

கட்சிக்காரர்களையே காப்பாற்றத் தெரியாத விஜயகாந்த்

தனது சொந்த கட்சி காரர்களையே கட்டி காப்பாற்ற தெரியாதவர் விஜயகாந்த். அவர்
சொத்து சேர்க்கத்தான் கட்சி நடத்துகிறார். இப்போது கூட்டணியும் அமைத்துள்ளார்.

என்ன நடக்குதுன்னே அவருக்குத் தெரியலையே

என்ன நடக்குதுன்னே அவருக்குத் தெரியலையே

இப்போது சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்கிறதா.. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடக்கிறதா? என்று கூட விஜயகாந்துக்கு தெரியவில்லை.

வரன் பார்ப்பது போல

வரன் பார்ப்பது போல

முதல்வர் ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர்களை திருமணத்துக்கு வரன் பார்ப்பதுபோல தேர்வு செய்துள்ளார். அதேபோலதான் திருப்பூர் வேட்பாளர் உங்கள் சகோதரி சத்யபாமா ஆவார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார் விந்தியா.

English summary
ADMK actress Vindhya has teased DMDK leader VIjayakanth in her campaign speech in Tirupur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X