For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக தலைவர்கள் வெல்வார்களா?.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்!

|

சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் ஏகப்பட்ட தலைவர்கள் போட்டியில் உள்ளனர். பல கட்சிகளின் தலைவர்களும் கூட இந்தத் தேர்தலை சந்தித்துள்ளனர்.

அந்த அலை இந்த அலை என்று கூறப்பட்டாலும் கூட யாருடைய அலை வீசுகிறது என்பதை சத்தியமாக மக்களுக்கு தெளிவாகப் புரியவில்லை. எனவே வெ்ல்லப் போவது யார், வீழப் போவது யார் என்பதும் தெளிவாகத் தெரியாத நிலையே காணப்படுகிறது.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் களம் கண்டுள்ள தலைவர்கள், விஐபி வேட்பாளர்கள் குறித்த விவரம்..

டி.ஆர்.பாலு - ராசா

டி.ஆர்.பாலு - ராசா

திமுகவின் சார்பில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராசா ஆகியோர் நட்ச்த்திர வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டியடுகிறார். குமரி அனந்தன் தம்பி வசந்தகுமார் கன்னியாகுமரியில் நிற்கிறார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன்

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூரில் களம் கண்டுள்ளார்.

வைகோ - பொன். ராதா

வைகோ - பொன். ராதா

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.

திருமாவளவன்

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அன்புமணி - சுதீஷ்

அன்புமணி - சுதீஷ்

பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தேமுதிக தலைவர் சுதீஷ் ஆகியோரும் விஐபி வேட்பாளர்கள் ஆவர்.

5 முனைப் போட்டியால் கவலை

5 முனைப் போட்டியால் கவலை

தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே வாக்குகள் பிரியும் என்பதால் யார் யார் வெல்லப் போகிறார்கள் என்பது இன்று மாலை 6 மணிக்குள் முடிவாகி விடும்.

English summary
Among the prominent candidates in the field in Tamil Nadu are former minister Dayanidhi Maran (Central Chennai), former Telecom Minister A Raja (Nilgiris), DMK leader T R Baalu, Finance Minister P Chidambaram's son Karti (Sivaganga), MDMK leader Vaiko (Virudunagar) and Union Minister V Narayanasamy (Puducherry).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X