For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த மண்ணில் பட்டத்தை பறிகொடுத்தார் செஸ் ஆனந்த்- கார்ல்சன் புதிய உலக சாம்பியன்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்ற செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை நார்வேயின் கார்ல்சனிடம் ஆனந்த் பறிகொடுத்தார்.

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் இளம் வீரர் கார்ல்சனுடன் மோதினார்.

viswanathan anand and magnus carlsen

மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின் 9 சுற்று முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகள், ஆனந்த் 3 புள்ளிகள் பெற்று இருந்தனர்.

நேற்று 10 வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. 10வது சுற்று முடிவில் கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். ஆனந்த் 3.5 புள்ளிகள் மட்டும் பெற்றார்.

இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையை கார்ல்சன் பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.8.40 கோடி பரிசாக வழங்கப்படும். ஆனந்துக்கு ரூ.5.60 கோடி வழங்கப்படும்.

English summary
Magnus Carlsen lingered for a while over the board. A 65-move draw agreed upon, the modalities with the arbiters completed, hands shaken, Viswanathan Anand had swiftly exited the glass cage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X