For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவினர் பணப் பட்டுவாடா: திமுகவின் வழக்கை ஹைகோர்ட் முடித்து வைத்தது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று திமுக சார்பில் தஞ்சை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அவசர மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யவதாக குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்ரேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது

அப்போது, தேர்தல் முறைகேடு புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

English summary
DMK on Wednesday filed a petition in Madras High Court seeking a direction to Election Commission (EC) for control money distribution to voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X