For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தம்பித்துரை ஜெயித்ததும் முதல் திட்டமே கரூர் டூ கோவை 4 வழிச் சாலைதானாம்- இது செ.பாலாஜி

|

கரூர்: அதிமுக வேட்பாளர் தம்பித்துரை ஜெயித்த பிறகு முதல் திட்டம் கரூர் டூ கோவை நான்கு வழிச்சாலை திட்டம் தான் என்று கூறியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் மு.தம்பித்துரையை ஆதரித்து கரூர் முத்துராஜபுரம், சீனிவாசபுரம், வெங்காய மார்க்கெட், படிக்கட்டுத்துரை, மக்கள் பாதை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாலாஜியின் பிரசாரத்தின்போது பேசியதிலிருந்து சில....

5 வருஷம் உங்க கிட்டதானே இருந்தது கரூர்

5 வருஷம் உங்க கிட்டதானே இருந்தது கரூர்

சென்ற 5 வருடம் தி.மு.க வசம் கரூர் நகராட்சி இருந்தது. அப்போது பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை. அடிப்படை திட்டங்களை வழங்கவில்லை.

கரூருக்கு இதுவரை ரூ. 140 கோடி கொடுத்த அம்மா

கரூருக்கு இதுவரை ரூ. 140 கோடி கொடுத்த அம்மா

இந்தியா சுதந்திரம் வாங்கிய வுடன் கரூர் நகராட்சிக்கு இதுவரை 2 1/2 வருடங்களில் ரூ 140 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கியுள்ளது. இதுவரை இந்த தொகை இந்திய வரலாற்றிலே மிக உயர்ந்த தொகையாகும்.

முதல் திட்டமே

முதல் திட்டமே

நமது வெற்றி வேட்பாளர் தம்பித்துரை ஜெயித்த பிறகு முதல் திட்டம் கரூர் டூ கோவை நான்கு வழிச்சாலை திட்டம் தான். தற்போது புதிய காவிரி நீர் திட்டம் சுமார் 68 கோடியில் கரூர், இனாம் கரூர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் செயலாற்றப்பட்டு வருகிறது.

பசுபதிபாளையம் பாலம்

பசுபதிபாளையம் பாலம்

மேலும் பசுபதிபாளையம் புதிய பாலம் சுமார் ரூ13.75 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

35 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், பேன்

35 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், பேன்

மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் உள்ள குடும்பங்களில் 35 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அளவில் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்த பெண்கள்

வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்த பெண்கள்

பிரச்சாரத்தின் போது ஏராளமான பெண்கள் வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

English summary
We will lay a 4 lane road to Coimnbatore from Karur after our candidate Thambi durai won the election, said minister Senthil Balaji in his camapaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X