For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுள் கிளாஸ் அணிந்து ஆபரேஷன் செய்யும் சென்னை டாக்டர்.. நாளை நடக்கிறது!

Google Oneindia Tamil News

சென்னை: கூகுள் கண்ணாடியை அணிந்தபடி சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் நாளை அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் நேரடியாக காணலாம்.

கூகுள் கிளாஸ் போட்டபடி ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்வது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இதனால் டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளப் போகும் அறுவைச் சிகிச்சை மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டாக்டர் ராஜ்குமார் சென்னை லைப்லைன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை

எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை

இது ஒரு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும். இந்த அறுவைச் சிகிச்சையைத்தான் நாளை டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை கூகுள் கண்ணாடி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் உள்ளன். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இதை நேரில் பார்க்க முடியுமாம்.

புதிய புரட்சி

புதிய புரட்சி

இதுகுறித்து டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், மருத்துவ உலகில் இது ஒரு புரட்சிகரமான விஷயம். இந்த கூகுள் கிளாஸ் அறுவைச் சிகிச்சையை செய்யும் முதல் இந்திய மருத்துவர் நான் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

உலக மருத்துவர்கள் பார்க்கலாம்

உலக மருத்துவர்கள் பார்க்கலாம்

மேலும் அவர் கூறுகையில், இந்த அறுவைச் சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் காண முடியும். முக்கியமான அறுவைச் சிகிச்சைகளை பல்வேறு நிபுணர்கள் இணைந்து நடத்த இது வழி வகுக்கும் என்றார் அவர்.

டெஸ்க் டாப், லேப்டாப் போல, அணிந்து கொள்ளும் கம்ப்யூட்டர் என்ற செல்லப் பெயர் கொண்டது இந்த கூகுள் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Wearing a pair of Google goggles, a doctor will operate on a woman patient in Chennai today. The bariatric surgery - which reduces a patient's stomach usually with a gastric band - will be live streamed allowing users all over the world to see what the doctor does. "This is going to be a game-changer in medicine and I'm proud to be the first Indian surgeon to use this," said Dr JS Rajkumar of the Lifeline Hospitals in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X