For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய் பித்தலாட்டத்தில் திமுகவை ஓவர் டேக் பண்ணிடுச்சே அதிமுக.. உளறிய குஷ்பு!

By Mayura Akilan
|

சென்னை: தமிழ்நாடு முழுவதும் திமுகவை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வந்த நடிகை குஷ்பு திடீரென பிரசாரத்தை ரத்து செய்து விட்டு ஓய்வெடுத்து வருகிறார்.

ஆனால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில், குஷ்பு உளறிக்கொட்டியது தெரியவந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு உளறிய உளறல் சமூக வலைத்தளங்களில் கும்மியடிக்கிறது. எனவேதான் தலைமை லெப்ட் அன்ட் ரைட் வாங்கி கட்டாய ஓய்வெடுக்க வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சூறாவளி பிரசாரம்

சூறாவளி பிரசாரம்

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

ஆரம்பம் நல்லா இருக்கு

ஆரம்பம் நல்லா இருக்கு

கடந்த 10ம் தேதி பிரசாரம் மேற்கொண்ட குஷ்பு, நான் திமுக உறுப்பினராக வந்து உங்களை சந்திக்கிறேன், தமிழக மக்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்று நன்றாகத்தான் ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டு மருமகள்

தமிழ்நாட்டு மருமகள்

நான் உங்கள் வீட்டு மகளாக, உங்கள் வீட்டு மருமகளாக வந்து வாக்கு கேட்கிறேன். எனக்காக வாக்கு கேட்கவில்லை, தமிழக நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக கேட்கிறேன்.

ஏமாற்றிய ஜெயா…

ஏமாற்றிய ஜெயா…

ஜெயலலிதாவிற்கு வாக்களித்தீர்கள், ஆனால் அவர் இந்த மூன்று வருடத்தில் என்ன செய்தார், ஒன்றும் செய்யவில்லை, நமக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது என்று சொன்ன குஷ்பு பின்னர் பேசியதுதான் ஹைலைட்...

ஓவர்டேக் பண்ணிட்டாங்க…

ஓவர்டேக் பண்ணிட்டாங்க…

ஒரு ஆட்சி முடிஞ்சி மற்றொரு ஆட்சி வந்தா முன்னாடி இருந்தவங்களை ஓவர்டேக் பண்ண நினைப்பாங்க.

ஆனா… அதிமுக நம்மளை ஓவர் டேக் பண்ணிட்டாங்க எதுல?

ஆனா… அதிமுக நம்மளை ஓவர் டேக் பண்ணிட்டாங்க எதுல?

பொய், பித்தலாட்டம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு இதுல ஓவர்டேக் பண்ணிட்டாங்க என்று கூறி அதிர்ச்சியளித்தார்.

பவர்கட்ல ஓவர்டேக்

பவர்கட்ல ஓவர்டேக்

தலைவர் கலைஞர் ஆட்சியில 2 மணிநேரம் பவர் கட் பண்ணுவாங்க. எப்ப கரண்ட் போகும், வரும்னு தெரியும். ஆனா அதிமுக ஆட்சி காலத்தில 10 மணிநேரம் கரண்ட் போகுது என்றார்.

மீண்டும் வாய்ப்பு கொடுங்க

மீண்டும் வாய்ப்பு கொடுங்க

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசினார்.

வேலூர் பிரசாரம் ரத்து

வேலூர் பிரசாரம் ரத்து

வேலூரில் 15ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரது சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் எப்போது?

மீண்டும் எப்போது?

வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Actress Kushbhu's campaign cancelled ,this is the background story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X