For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பா, மகன் தகராறு விஷயத்தில் கருணாநிதி ஏன் அலட்சியம் காட்டினார்?: ஸ்டாலின் விளக்கம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும், தனக்கும் இடையே தகராறு என்று செய்திகள் வெளியானபோது பண்பாட்டின் காரணமாக தனது தந்தை அலட்சியம் காட்டியதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் முப்பெரும் விழா சென்னையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

சூழ்ச்சி

சூழ்ச்சி

பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு திமுகவை அழிக்க பலர் சூழ்ச்சி விலை பின்னினார்கள். ஆனால் அவர்கள் தான் அந்த வலையில் சிக்கி அழிந்தனர்.

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.

சிலர் சம்பத்தை பிரித்த போதிலும், நாவலர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரை கருணாநிதியிடம் இருந்து பிரித்த போதிலும் கூட திமுக அழியவில்லை. பின்னர் வைகோவை பிரித்த போதிலும் திமுக அழிந்துவிடவில்லை. திமுக எப்பொழுதும் கம்பீரமாக இருக்க கருணாநிதியே காரணம்.

பத்திரிக்கைகள்

பத்திரிக்கைகள்

திமுகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில பத்திரிக்கைள் தொடர்ந்து செய்திகள் வெளியிடுகின்றன.

தகராறு

தகராறு

எனக்கும், கருணாநிதிக்கும் இடையே தகராறு என்று செய்தி வெளியிடுகிறார்கள். பண்பாட்டின் காரணமாக இந்த விவகாரத்தில் கருணாநிதி அலட்சியம் காட்டினார். நான் அறிக்கை விட்டு விளக்கம் அளித்தேன். இருப்பினும் தொடர்ந்து தவறாகவே எழுதுகிறார்கள்.

கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதி இல்லை என்றால் நான் இல்லை, நீங்கள் இல்லை, ஏன் பத்திரிக்கைகளும் இல்லை என்றார் ஸ்டாலின்.

English summary
DMK treasurer MK Stalin told that his father cum party superemo Karunanidhi kept mum when dailies published news saying that all was not well between them because of decency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X