For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.க்களும் இன்று மீண்டும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி பதவியேற்றனர்.

அமைச்சர்களாக பதவியேற்கும் போது மகிழ்ச்சியாகவும்

அமைச்சர்களாக பதவியேற்கும் போது மகிழ்ச்சியாகவும்

சந்தோசமாகவும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு சென்றதை அடுத்து கண்ணீரும் கதறலுமாய் பதவியேற்பு நிகழ்ந்தது.

கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி

கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி

முதல்வர் ரேஸில் இருந்தவர் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவரது குரல் உடைந்து கம்மியது. கண்ணீர் வழிந்தோடியது. ஒருவழியாக பதவிப்பிரமாணத்தை வாசித்து முடித்தார்.

விசும்பிய வைத்தியலிங்கம்

விசும்பிய வைத்தியலிங்கம்

ஜெயலலிதா அமைச்சரவையில் வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அமைச்சராக பதவி வகித்தவர் வைத்தியலிங்கம். இவர் பதவிப்பிரமாணம் வாசித்தபோது விசும்பல் சத்தம்தான் அதிகம் கேட்டது.

கதறிய பா.வளர்மதி

கதறிய பா.வளர்மதி

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சராக பதவி வகித்த பா.வளர்மதி இன்று மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது கண்ணீர் மல்க பதவியேற்ற அவர், பதவிபிரமாணத்தை முடிக்கும் முன்பாகவே கதறி அழுதுவிட்டார்.

வாசிக்கவே முடியாத எஸ்.பி.வேலுமணி

வாசிக்கவே முடியாத எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு என பலதுறைகளுக்கு பொறுப்பேற்று அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இன்று மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்றார். அப்போது பதவிப்பிரமாணத்தை அவரால் வாசிக்கவே முடியவில்லை. குரல் கம்மி, விசும்பல்தான் வெளிப்பட்டது. கடைசியில் கதறியே விட்டார்.

குமுறிய கோகுல இந்திரா

குமுறிய கோகுல இந்திரா

ஜெயலலிதாவிற்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே ஒப்பாரி வைத்து அழுதவர் கோகுல இந்திரா. இன்று மீண்டும் பதவியேற்கும்போது கண்ணீர் விட்டு கலங்கியபடியே பதவியேற்றார்.

சிறை சென்ற ஜெயலலிதா

சிறை சென்ற ஜெயலலிதா

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.

அமைச்சர்கள் கதறல்

அமைச்சர்கள் கதறல்

இந்த தீர்ப்பை கேட்ட உடனே பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் இருந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். அதேபோல இன்றைய தினம் பதவிப்பிரமாணம் எடுத்தபோதும் கண்ணீர் மல்க கதறியபடியே பதவியேற்றனர்.

English summary
Jayalalithaa loyalist O Panneerselvan took oath as the Chief Minister of Tamil Nadu for the second time at Raj Bhawan in Chennai. But, it was not a happy occasion. With their supreme leader and former chief minister J Jayalalithaa's in jail, most of the ministers cried while taking the oath. Ministers Gokula Indira, Mukkur Subramanian and many others broke down while taking oath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X