For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். உளவாளி அருண் செல்வராசனின் காதலி பல் மருத்துவக் கல்லூரி மாணவி – கண்ணீர் விட்டு கதறல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி அருண் செல்வராஜனின் காதலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல் மருத்துவக்கல்லூரியில் படித்துவரும் அந்த மாணவிக்கு அருண் செல்வராஜன் உளவாளி என்பது தெரியாது என்று போலீசில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான அருண் செல்வராஜனை, கடந்த 10-ஆம்தேதி சென்னை சாலி கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.

கடந்த 2012-ஆம் ஆண்டு திருச்சியில் தமீம் அன்சாரி, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஜாகீர் உசேன் ஆகியோர் பாகிஸ்தான் உளவாளியாக பிடிபட்டிருந்த நிலையில் 3-வது நபராக அருண் செல்வராசன் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Woman linked to ISI suspect being quizzed

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்

இலங்கை தமிழரான அருண் செல்வராசனை அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மூளைச்சலவை செய்து உளவாளியாக மாற்றியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

சென்னையில் நிகழ்ச்சிகள்

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த அருண் செல்வராஜன், சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

கடலோர பகுதிகளுக்கு குறி

துறைமுகங்கள்  உள்ளிட்ட பாதுகாப்பு நிறைந்த பகுதிகளிலும் ஊடுருவிய அவர், உளவு தகவல்களை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கடலோர பகுதிகளை குறி வைத்து அருண் செல்வராஜன் மிகப் பெரிய சதி திட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முறியடித்துவிட்டனர்.

இது தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக அருண் செல்வராசனை நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்தனர். வருகிற 23-ஆம் தேதி வரை 6 நாட்கள் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லி சிறப்பு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த காவல் முடியும் முன்னரே, அருண் செல்வராஜனின் பின்னணி பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரிடம் இரவு  -  பகலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அருண் செல்வராஜனின் செல்போன்களை வைத்து அவர் யார் - யாரிடம் நெருங்கி பழகினார் என்பது பற்றிய பட்டியலை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சேகரித்தனர்.அப்போது, சென்னையில்

அருண் செல்வராஜன் காதலி

அருண் செல்வராசனுக்கு காதலி ஒருவர் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி ஒன்றில் பல் மருத்துவம் படித்து வரும் அவரும், அருண் செல்வராஜனும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர்.

பல் மருத்துவ மாணவி

காதலி படித்து வரும் மருத்துவ கல்லூரியில் அருண் செல்வராசன், காதலிக்காக நிகழ்ச்சி ஒன்றையும் பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார். இதில் நடிகர், நடிகைகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

செட்டில் ஆக திட்டம்

காதலியின் நம்பிக்கைக்குரியவராக அருண் செல்வராஜன் நடந்து கொண்டுள்ளார். இதனால் அவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகவும் மருத்துவ மாணவி முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அருண் செல்வராஜன் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

அருண் செல்வராஜன் பின்னணி

இதனை கேள்விப்பட்டு அருண் செல்வராஜனின் காதலி கடும் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அருண் செல்வராசனின் பின்னணி பற்றி தெரிந்தே அவர் பழகினாரா? உளவு தகவல்களை சேகரித்து அனுப்புவதற்கு உதவிகள் ஏதும் செய்தாரா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கண்ணீர் விட்டு கதறல்

இது தொடர்பான கேள்விகளுக்கு அருண் செல்வராஜனின் காதலி கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும், அருண் யார்? என்று தெரியாமல் பழகிவிட்டேன். என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் அருணின் காதலி பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Officers of the National Investigation Agency (NIA) are interrogating a woman student of a dental college after Sri Lankan national Arun Selvarajan, a suspected operative of Pakistan's Inter-Services Intelligence, spilled the beans about his relationship with her and his accomplices in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X